உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு.கருணாநிதி இப்படி,எதிர்ப்பு நெருங்கமுடியாத எரிமலை யாக இலட்சியக் காளைகளின் இன்பச் சோலையாக -திராவிடத்தில் ஓயாது ஒலிக்கும் தேன் கீதமாக -வெற்றிச் சிரிப்பிலே, வீரநடையிலே, நிழலாட்டம் போடும் நிரந்தர எழிலாக உயர்ந்து நிற்கிறது உழைப்பாளிகள் கட்டி முடித்த திராவிட முன் னேற்றக் கழக உப்பரிகை. இந்த உப்பரிகையிலே உல்லாசியின்உற்சாகக் கீதமிருக்காது. உழைத்தவனின் வெற்றித் தெம்மாங்கு இருக்கும். ஏவலர் சூழ-எடுபிடிகள் சுற்றிட - இன்பத்தில் மிதந்து கிளம்பிடும் எக்காள மிருக்காது. ஏழை வாழ-எத்தன் வீழ - இலட்சிய வேலேந்திக்கிளம்பிடும் வேங்கைகள் இருப்பார்கள். பணபுரியின்மீது பாயலாமா?..... பதவிக்கோட்டை யை முற்றுகையிடலாமா? என்ற பாசி மனத்தவ ரின் சதியாலோசனை நடைபெறாது இந்த உப்பரிகையில்! பணிபுரிவோர் மீது பற்று வைப்போம் - பதவி விரும்பார்மீது நம்பிக்கை கொள்வோம்-என்கின்ற பாச அலைகள் மோதிக்கொண்டிருக்கும். வேஷமிருக்காது, நேசமிருக்கும் கூலிக்கு வேலையென்ற குள்ள எண்ணமிருக்காது; கொள் கைக்கு செயல் என்ற பரந்த எண்ணம் இருக்கும். கள் இத்தகைய உப்பரிகையிலேதான் உலவுகிறார் திராவிட முன்னேற்றக் கழக அறப்போர் வீரர்கள். அறப் போர் வீரர்கள் ஆகா! எவ்வளவு ஆனந்தம் பெருக்கெடுக்கிறது நமக்கு!... கண்ணிலே நீர் 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/10&oldid=1688629" இலிருந்து மீள்விக்கப்பட்டது