இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
10 இதய பேரிசை, தங்கி நின்றவர்கள் கையிலே வேல் தாங்கி நிற்கி றார்கள் என்றால் எவ்வளவு மகத்தான பணி புரிந் திருக்கிறார்கள், மனமுடைந்த பிறகுங் கூ. எண்ணிப்பார்க்கவேண்டும். L என்று அன்றொருநாள் - ஆம்1949 செப்டம்பர் 17 -ம் நாள் சிங்காரச் சென்னையிலே தளபதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துவக்க விழாவிலே கண்ணீர்த் துளிகளைச் சிந்தினார், வார்த்தைகளைச் சிந் துவதற்குமுன்! அண்ணாவின் கண்ணீர்- அவர் வடித்ததுமட்டு மல்லவே - தம்பிமார்களின் தணல் நெஞ்சம், இரத் தத்தை நீராவியாக்கி, அதைக் கண்ணெனும் வானத்து வழியாக வழியவிட்ட பெரு மழைத்துளி களின் கூட்டல்லவா? அந்தக் கண்ணீர்த் துளிகள் வீண்போகுமா? வீண்போகத்தான் விடுவோமா? "சிறு துளி பெரு வெள்ளம்" அதோ அலைவீசும் பெரு வெள்ளம்! கண்ணீர் வெள்ளமா? அல்லது களிப்பு வெள்ளமா?