உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 17 வேண்டுமென்பதுதான் நம் குறிக்கோள். கம்ப ராமாயணம் திராவிடரை அரக்கர்கள் குரங்குகள் என்று சித்தரிக்கும் சிலந்திக்கூடு. ஆகவே அதை வெறுக்க வேண்டுமென்றோம். அடிப்படையான வெறுப்பே அதுதான், ஆரிய ராமனை கம்பன் கடவுள் என்று கூறிவைத்தான். அந்தக் கயமைத் தனத்தைக் கண்டித்தோம். அப்படிப்பட்ட ஒரு நூல் திராவிடரின் பூஜைக்குரிய தாயிருப்பது தன்மானமற்றச் செயல் என்று விளக்கினோம். காலத்துக்கேற்றவாறு கம்பராமா யணத்திலே உள்ள கருத்துக்களை அனுமதிக்கத் தான் வேண்டுமென்றார்கள் கம்பதாசர்கள்! நாமோ அவைகளை ஆட்சேபிக்கவில்லை. 'ஒரு இனத்தையே இழிவுபடுத்தும் முறையில் கம்பன் திராவிடரைக் காட்டிக்கொடுத்திருக்கிறான் என்பதே நம்முடைய தலையாயக் குற்றச்சாட்டு. அதைத்தான் எதிர்த்துப் போராடினர் புலவர் பலர். அந்த நேரத்திலேகூட நாம் கூறினோம் நாங்கள் இலக்கிய விரோதிகளல்ல; சிலப்பதிகாரம்போன்ற நூல்கள் அக்காலக் கருத் துக்கள் பல கொண்டனவாயினும் திராவிடரை இழித்துப் பேசவில்லை என்பதோடு திராவிடரை உயர்த்திக் காட்டியிருக்கின்றன, அவைகளை நாங் கள் வெறுப்பதில்லையென்று விளக்கியிருக்கிறோம். சிலப்பதிகாரம் போன்ற தமிழரின் செல்வங்கள் புதைப்பட்டுக் கிடக்கும்போது த மி னை அரக்க னெனக்கூறும் கம்பராமாயணக்துக்கேன் விழா நடத்துகிறார்கள் வீணர்கள் என்று வினவியதுண்டு. நாம் அப்படி வினவியது சிலப்பதிகாரத்தின்மீது நமக்கேற்பட்ட பக்தியல்ல. பகவத் உணர்ச்சியு மல்ல. அல்லது அதிலே காணப்படும் அளவுக்கு மீறிய கற்பனைச் செய்திகளல்ல. தமிழர்களுடைய வாழ்க்கைமுறை சிலப்பதிகார காலத்தில் எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/18&oldid=1688650" இலிருந்து மீள்விக்கப்பட்டது