உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 தய பேரிகை. யிருந்தது என்பதை விளக்கும் நூலாக சிலப்பதி- காரம் அமைந்திருக்கிறது என்பதற்காகவும், வட நாட்டாரின் முடிநெறித்த திராவிட வீரர்களின் சிறப்பு காணப்படுகிறது அதிலே என்கிற காரணத் தாலும் நீதிக்காக வாழ்ந்த திராவிட மன்னர்களின் பெருமை கூறப்படுகிறது அதிலே என்கிற ஆர்வத் தாலும் கண்ணகியென்கிற பாத்திரம் கற்பனைக் கெட்டாத செயல்களை செய்தாள் என்பதை நம்பா விட்டாலும் அக்காலப் பெண்மணிகளின் துணிவு சித்தரிக்கப்பட்டுள்ள தன்மையை அறிந்துகொள் கிற வாய்ப்பு அதிலே இருப்பதாலும், சேர, சோழ, பாண்டியர் மூவருடைய ஆட்சிபற்றிய விபரங்கள். தெரிந்துகொள்ளும் அரிய நூல் அது என்பதாலும் சிலப்பதிகாரத்தை நாம் ஆதரிக்கிறோமே தவிர வேறில்லை. திருக்குறளை ஏன் போற்றுகிறோம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் என்பதற்காகவா? இல்லை; அக்காலத் தமிழகத்தைப்பற்றிய நல்லதொரு படப் பிடிப்பு திருக்குறள் என்பதாலும் திராவிடர் நீதி முறைகள் குறிக்கப்பட்டிருப்பதாலுமே குறளுக்கு விழா எடுக்கிறோம். குறைகளேயில்லாதது அல்ல குறள். அந்தக் குறைகள் அக்காலத்தில் எழுதப் பட்ட நூல் என்கிற ஒரே காரணத்தில் அடிபட்டுப் போகின்றன வரப்போகும் காலங்களிலே இன்றைக்கு எழுகப்படுகிற புரட்சிக் கருத்துக்கள் கூட பழமையென்று கூறப்படலாம். பொதுவாக குறள், சிலப்பதிகாரம்போன்ற நூல்களிலே திராவிடரின் பெருமை ஒளிவிடுகிறது; ஆகவே பாராட்டுகிறோம். கம்பன் திராவிடரை இழிமக்களாய் ஆக்கிவைத்தான்; ஆகவே எதிர்த் தோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/19&oldid=1688652" இலிருந்து மீள்விக்கப்பட்டது