உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

22 இதய பேரிகை. நம்மை ஆட்டிப்படைக்கும் குருக்கள் மார்களை விடக் கொடுமை நிறைந்தவர்கள். கண் அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? சீர் திருத்தம் முளைவிட்டது. சிரித்துக் கிடந்த மூட நம்பிக்கைகள் மூலையில் போய் முக்காடிட்டு அமர்ந் தன. சீர்திருத்தவாதிகள் செத்து மடிந்தார்கள். சீர்திருத்தம் சீரழியவில்லை செங்கோல் பிடித்தது. மேல் நாட்டிலேயிருந்த கடவுளின் சிலைகள் காட்சிசாலைக்குப் போய்விட்டன. நம் நாட்டிலோ ஆற்றங்கரை கணபதி அப்படியேதானிருக்கிறார். அறியாமைக்கு நீர் ஊற்றி வளர்க்கப்படுகிறது. அதையும் அரசாங்கமே முன்வந்து செய்கிறது. சுக்கல் சுக்கலாகப்போன சோமநாதபுரம் கடவுளை இப்போது தூக்கி மனையில் வைத்து மகிழ்கிறது நமது அரசாங்கம். அதுமட்டுமா? வேப்பிலை கட்டிய சாமியார் வருகிறார். தில்லையிலே நிர்வாண சாமியார் திரிகிறார். ஐயப்பன் கோயிலிலே பாம்பு அவதாரத்தில் பகவான்வந்தார். ரமணர் செ செத்தார், வால்நட்சத்திரம் புறப்பட்டது. பாண்டுரங்கனைத் தூக்கினார்கள், வரமாட்டேன் என்று சொல்லி விட்டார் இந்த வருடம் தேர்தல் நடக்காது என்று அகில இந்திய அற்புத ஜோசியர் கூறிவிட்டார். இப்படியெல்லாம் செய்திகள் வருகின்றன. னேக மாக பத்திரிகைகள் எல்லாம் பஞ்சாங்கமாகிவிட் டன. சரிந்துபோன சமுதாயத்துக்கு இன்னும் ஆழமாகச் சவக்குழி தோண்ட முயற்சி நடக்கிறது இங்கே. அந்த முயற்சியை முறியடித்து முதுமையேறிப் போன மூடக்கொள்கைகளை வேரோடு சாய்த்துப் புதுவழி காணத்தான் அறிவியக்கம் பணியாற்றி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/23&oldid=1688664" இலிருந்து மீள்விக்கப்பட்டது