உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நமது உரிமை. "பேனாவை உடைப்போம்... வாயை அடைப் போம்.. என்ன தைரியம் உனக்கு! எங்களைப்பற்றி பேச நீ யார்? எங்கள் நடவடிக்கைகள் குறித்து எழுத நீ யார்? நாங்கள் சுதந்திரம் வாங்கியவர்கள். நாட்டையாளுகின்றவர்கள். நாங்கள் வைத்தது சட்டம், விடுதலை வாங்கித் தந்த எங்களுக்கு முன், விவேக சிந்தாமணி....நீ யார்? நாங்கள் விடுவித் தோம் மக்களை! நாங்கள் வேதனைப்படுத்துவோம் அவர்களை! விழியிலே நீர் பெருக்கி மொழியிலே கனல் பெருக்கி விசாரக்குரல் எழுப்புகிறாயே ; உனக்கென்ன இருக்கிறது உரிமை? நாங்கள் பாரததேவியின் விலங்கொடித்தவர்கள் பட்டினி போடுவோம் மக்களை. பசி பசி எனக் கேட்டிடும் கூக்குரல் எங்களுக்குக் கோகிலகானமாக இருக் கும். அதற்காக நீ ஏன் ஒப்பாரி வைக்கிறாய் வெள்ளைக்காரனை வெளியேற்றிய வீராதி வீரர்க ளப்பா நாங்கள் .. எங்கள் ஆட்சியிலே நீ பேசக்கூ டாது; நெருப்பு மழைபொழியும்; நீ கேட்க உரிமை கிடையாது. எரிமலைகளை உண்டாக்குவோம் கண் டித்து எழுதக்கூடாது நீ சர்க்காருக்குச் சாமரம் வீசலாம்.... சந்தோஷப்படுவோம், சந்தணம் பூச லாம் தட்டிக்கொடுப்போம். மயக்கம் ெ தளிய மருந்து கொடுத்தால் மண்டையிலடிப்போம். யார் எங்களுக்கு மருந்து கொடுக்க! பார்த்தாயா போலீஸ் படையை பார்த்தாயா சிறைச்சாலையை! சிந்தித்தாயா தூக்குமேடையை! கண்டிருக்கிறாயா கண்ணீர்ப்புகையை! ஜாக்கிரதை! எங்கள் விஷ நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/24&oldid=1688668" இலிருந்து மீள்விக்கப்பட்டது