________________
24 தய பேரிகை. யத்தில் தலையிடாதே! நீ பேசாதே! எழுதாதே! நல்லவைகளைக்கூட நீ சொல்லலாம்... நாங்கள் அவற்றை நஞ்சாகத்தான் மதிப்போம்... உஷாரா யிரு! உயிரை விடாதே! 35 இப்படிப்பட்ட எச்சரிக்கைகள் - மிரட்டல்கள் -அடக்குமுறைகள் -அதிகார அம்புகள் இத தோரணையில் இல்லாவிட்டாலும், இந்தக் கருத்தை எதிரொலிக்கும்விதத்திலே எதிர்க்கட்சிகளின் மேல் ஏவப்படுகின்றன் நமது சர்க்காரில்! குன்றத்தூர் சம்பவத்திலிருந்து கூச்பீஹார் கொடுமைவரையில் நாட்டிலே பொழுது போக்கும் கதைகளாக விட்டன. ஆ அரசாங்க சிறைச்சாலைகளுக்கு அஜீர்ணம் ஏற்படுகிற அளவுக்கு அரசியல் கைதிகள் நிரப்பப் பட்டுவிட்டனர், அங்கே அவர்களுக்கு ஏற்படுகிற இன்னல்களோ நினைத்தாலே நெஞ்சு எரிகிறது, அவ்வளவு பயங்கரமானவை திராவிட முன்னேற் றக் கழகத்தினர் நடத்திய போராட்டங்களில் சிறைப்பட்ட வீரர்கள் அந்தக் கொடுமைகளை சுவைத்துவிட்டுத்தான் வந்திருக்கிறார்கள் மொட் டையடிப்பது-பட்டினி போடுவது-வேலைகள் தந்து வேதனைப்படுத்துவது இப்படி கொடுமைக் கூர்வேல் பொழிந்திருக்கிறார்கள் சிறைச்சாலைகளிலே! திரா விட கழகத்தார் நடத்திய மறியலிலே சிறைப்பட்ட தோழர்கள் பட்டிருக்கும் அவதியும் கொஞ்சமல்ல. கம்யூனிஸ்ட் கட்சிக் கைதிகளுக்கும் காண்போர் கண்ணீர் விடும் நிலையிலேயே உபசாரம் நடந்திருக் கிறது, சிறைக்கோட்டத்திலே! இன்றைக்கு அவர் கள் வசம் இருக்கிற சிறைச்சாலைகள் முன்பொரு நாள் அவர்கள் வாழ்ந்த இடங்கள் என்பதை உண்மையாகவே மறந்துவிட்டார்கள். "மோர்