உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 இதய பேரிகை. கள். செத்துக்கொண்டிருக்கும் ஜீவன்கள். " இறப் புலகில் இன்பம் காண்போம்" என்று இவ்வுலகை வெறுத்த பிணக்குவியல்கள் சோறு கிடைக்காத வர்- சுகம் தெரியா தவர் - இப்படி ஒரு படையல். சிறைக்கோட்டம், அங்கே செம்மறியாடுகள் போல அடைக்கப்பட்டிருக்கும் 'இந்தியப் பிரஜை' கள். செக்கிழுக்கும் மாடுகளென மனிதர்கள். இப்படி ஒரு விருந்து தேவிக்கு! எ தடுப்புக்காவல் சட்டம்-வகுப்புவாரிஉரிமைக்கு வைதத கொள்ளிக் கட்டை ழுத்துரிமைக்கு போடப்பட்ட முள்வேலி பேசாதே என வாயைப் பொத்தும் இரும்புக் கரங்கள் இப்படி ஒரு சாப் பாடு சுதந்திர அன்னைக்கு ! அவள் தேவி ஆடினாள் - கிடுகிடென ஆடினாள்-நடன மல்ல; நடுக்கத்தால் மிரண்டு ஆடினாள். சிங்காதனம் ஆடிற்று - மேடை ஆடிற்று-பந்த லும் ஆட ஆரம்பித்துவிட்டது - ஏன் ஆடாது? சுக மண்ட சுதந்திரம் சுவையான சொல் ஆயிற்றே. பொன்கூண்டில் அடைபட்டிருப்பதைவிட மண் தரையில் உலவுவது மேல் என்பார்களே - அவ்வளவு சோபிதமான வார்த்தையல்லவா சுதந்திரம்-அதை சோக வார்த்தை ஆக்கிவிட்டார்களே; பத்தைச் சூது சுரங்கமாக்கிவிட்டார்களே; சுழன் றன கேள்விகள். கேள்விகளா அவை.....சூற வளிக் காற்று! ஆட ஆரம்பித்த பந்தல் அடியோடு விழுவதற்குப் புறப்பட்ட புரட்சிப் புயல். அதோ.. எத்தனை தூண்கள் விழுந்துவிட்டன. கிரபளானி - கோஷ் - பிரகாசம்-ஓமாந்தூரார் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/31&oldid=1688688" இலிருந்து மீள்விக்கப்பட்டது