உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 31 காணவில்லை தொண்டாற்றும் இந்தத் தூண்களை! நாடு துன்பக்கேணியான பிறகும் தேவிக்குப் படையல் செய்யும் துன்மார்க்க முறையை தொடர் கதையாக்க விரும்பாதவர்கள் வெளியேறிவிட்ட னர். எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தால்தான் என்ன, நல்லவர்கள் வெளியேறிவிட்ட பிறகு நாங்களும் இருக்கிறோம் என்று எந்தக் கட்சியாலும் நடித்து கொண்டிருக்க முடியாது இது காங்கிரஸ் கட்சிக் விதிவிலக்கல்ல. தேசீயப்பந்தல் ஆட ஆரம்பித்து விட்டது. புயல் வீசுகிறது. மழை கொட்டுகிறது. பந்தல் விழத்தான்போகிறது. விழுந்துவிட்டபிறகு நிச்சயமாக நிமிர்த்தி வைக்க முடியாது. இந்தப் பந்தல் சேலத்து தி. மு. கழக மாநாட் டில் விழுந்த பந்தல் அல்ல. பகலிலே பந்தல் விழுந்தது மாவீரர் கூடினர். மாலையில் அதே பந்தலில் மாநாடு துவங்கியது. தி.மு. கழகத்தார். சொல்வீரர் மட்டுமல்ல; செயல்வீரர் என்பதையும் காட்டிக்கொள்ள விழுந்தது அந்தப் பந்தல். காங்கிரஸ் பந்தல் எவராலும் தூக்கி நிறுத்த முடி யாத அளவுக்கு-காந்தியாரே திரும்பி வந்தாலும் காப்பாற்ற முடியாத அளவுக்கு-சாயப்போகிற பந்தல். ஆடும் பந்தலுக்குள்ளிருந்து அதிகார வேட்டுக் கள் கிளப்புகிறார்கள்- ஆணவமொழி பேசுகிறார்கள் - அடக்குமுறை வீசுகிறார்கள்-நாம் அவர்களுக்கு முதலில் நினைவுபடுத்துகிறோம். பந்தல் ஆடுகிறது; விழப்போகிறது - பார்த்து நடவுங்கள் என்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/32&oldid=1688689" இலிருந்து மீள்விக்கப்பட்டது