________________
கருகிடும் மொட்டுக்கள்! O இளந்தளிர் ! கொழுந்து! பசலைப்பெண்! ஒன்பது வயது நிறைந்த சிறுமி! ஒருவீட்டிலே வேலைக்காரி வேலை அவளுக்கு. அவளுக்கு எஜமா னர்கள் இரண்டுபேர். அந்த ஒன்பதுவயது சிறுமி யின் மீது எழுபத்திரெண்டு காயங்கள்! வேலையிலே தவறும்போதெல்லாம் அவள் அப்படி தண்டிக்கப் பட்டிருக்கிறாள். அடிக்கப்பட்டிருக்கிறாள். பட்டிருக்கிறாள். எழுபத்திரெண்டு காயங்களும் நீதிமன்றத்திலே பேச ஆரம்பித்தன. இரண்டு எஜமானர்கள் மீதும் வழக்கு நடைபெற்றது இரு வரும் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். சுடப் இந்த நிகழ்ச்சி கொளும்பிலே நடைபெற்றிருக் றது. குழந்தை பெண்ணின்மீது எழுபத்திரெண்டு காயங்களை உண்டுபண்ணியிருக்கிறார்கள் என்றால் மனிதத் தன்மைக்கும் அவர்களுக்குமுள்ள தொடர் பு எவ்வளவு மோசமாக அறுந்துவிட்டது என்பது தெளிவாகிறது. கொளும்பிலே கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் சமுதாயம், அந்த நல்ல தீர்ப்பை அவதிப்படுகிறவர்களுக்கு வழங்கி யிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என் பதில்தான் கிடைக்கிறது. கொளும்பிலேமட்டு மல்ல இந்தக்கொடுமை! நாம் வாழும் இடத்திலே அதைவிடப் பெரியகொடுமைகள் அகோர நர்த்தன மாடுகின்றன. கொளும்பிலே சிறுமியின் ரத்தம் கொட்டப்பட்டிருக்கும் - இங்கேயோ எலும்புகளே முறிக்கப்பட்டுவிடுகின்றன. கொளும்புக் கோரம் ற