உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதய பேரிகை.

                             மு. கருணாநிதி.

சிறு துளி பெருவெள்ளம்.

    வேதனைப் புயலொன்று கிளம்பிற்று. நமக்கும் நமது தலைவருக்கும் இருந்துவந்த பாசமென்னும் பூந்தோட்டத்தை பாழாக்கிற்று. தலைவரைக் கண்டிக்கவேண்டிய பாரம், நமது இதயத்தின்மீது ஏற்பட்டுவிட்டது. அவர், மிக மிகச் சாதாரணமென்று கூறும் திருமணச் சம்பவத்தால் நமது திகைப்பு, கண்ணீர் பயனற்றுப்போய் நமது நிலையிலே ஒரு "வருந்தத் தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது"

மாலை மணி பத்திரிகையின் முதல் இதழிலே தலையங்கத்தை இப்படித் தீட்டியிருந்தார் அண்ணா.'சாய்ந்த எழுத்துக்கள்

    வருந்தத்தக்க மாறுதல் ஏற்பட்டுவிட்டது.
    அந்த வாசகத்தை ஊன்றிக் கவனிக்கவேண்டும்.
   சரித்திரம் படித்து-சர்வதேச அரசியலிலே திளைத்து -தியாக முத்திரைகளைப்பெற்று-பேச்சால் -எழுத்தால் -நடிப்பால், பேரறிஞர் முதல், பாமரர் வரையில் தங்கள் கருத்தின் பக்கம் திரும்பக்கூடிய அளவுக்கு திறமையோடு பணிபுரியும் ஆயிரமாயிரம் தம்பிமார்கள் இருந்தும் அவர்களை வைத்துக் கொண்டு, மாற்றார் மலைக்குமளவுக்கு-விரோதிகள் வெகுளுமளவுக்கு-சந்தேகங்கொண்டோர் சந்தோ ஷப்பட; சாபம்கொடுத்தோர் சஞ்சலப்பட, சமுத்தி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/4&oldid=1706382" இலிருந்து மீள்விக்கப்பட்டது