உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4 இதய பேரிகை

________________

ரத்தின் பேரலைகளென ஓயாது உழைத்து வரும் உண்மைத் தொண்டர்கள் பதினாயிரக் கணக்கில் இருந்தும் அவர்களை வைத்துக்கொண்டு, ஒரு மகத் தான அரசியல் இயக்கத்தை நடத்தக்கூடிய மனப் பக்குவமும், மனவலிமையும் கொண்ட அறிஞர் அண்ணா 'வருந்தத்தக்க மாறுதல்' என்று வாட்டத்துடன் குறிப்பிட்டார் என்றால் அந்தச் சூழ்நிலையை எப்படித்தான் விவரிக்கமுடியும்.

    சுரங்கத்திலிரங்கி தங்கம் பெயர்க்கும்போது பாறையொன்று உருண்டுவிழ- அந்தப் பாறையிடமிருந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியும், நாம் கொள்கையைக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியும் ஒன்றேதான்.
   எவ்வளவு துடிதுடித்திருக்கிறோம்,எப்படி யெப்படி துவண்டுபோயிருக்கிறோம். சிந்திய கண்ணீர் எவ்வளவு! செருமியழுத ஒலி செந்தமிழ் நாட்டையே உலுக்கிவிட்டதே! சிந்தாகூலர்களாக - செய்வதறியா சிலைகளாக மாறிவிட்டோமே சில

நாட்கள்.

  அந்த சில நாட்களை நினைத்தால் -- அய்யோ -மீண்டும் வரவேண்டாம் அந்த நாட்கள் என்ற பிரார்த்தனை தானே நம் நெஞ்சிலே துள்ளியெழுகிறது.
  பிரிகிறோமே என்ற பேரிடி ஒருபுறம், பிரிந்துவிட்ட பிறகு பிரிந்துவிட்டோமே என்ற சோகத்தை விட பிரிந்துபோன நாம் பெரியதொரு எதிர்காலத்துக்குறியவர்களாயிற்றே நாட்டுப்பணி யென்னும் நல்லதோர் ரதத்திலே பூட்டப்பட்ட காளைகளாயிற்றே; எப்படி சாதிக்கப்போகிறோம் லட்சியங்களை' !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/5&oldid=1706384" இலிருந்து மீள்விக்கப்பட்டது