உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 இதய பேரிகை, பாசறையாக மாறிவிட்டது நமது முயற்சியின் பயன் கண்ணீர்த் துளிகளென்ற புதுப்பெயர் நமக்கு யாரும் கண்டு பிடித்து கொடுத்ததல்ல. நாமே நமக்கு சூட்டிக்கொண்ட சோகப்பெயர். என்று ஏழை கூறிக்கொள்வதிலே இழிவு கிடை யாது. ஏழை பாடுபடுபவன் தன்னை பாட்டாளி எனப்பகருவ திலே பரிகாசத்திற்கிடமில்லை. கண்ணீர் விட்டுக் கதறிய நாம், நம்மைக் கண்ணீர்த்து ளிகள் என்று கூறிக்கொள்வதிலே கௌரவமிழந்தவர்களாகிவிட மாட்டோம். மாறாக பெருமையடைகிறோம்-பெரு மிதங்கொள்கிறோம் -பீடுநடை போடுகிறோம். ணம் என்ன ? கார ஜாரின் அரசியலை ஜாலக்காரன் ரஸ்புடீனை சல்லடைக் கண்களாக்கியது எது? கண்ணீர்த்துளி. பிரஞ்சு நாட்டுப் பேயர்களாம் பிரபுக்களின் பிடரியில் அடித்தது எது? கண்ணீர்த்துளி, சிதைந்த சீனா, செஞ்சீனாவானது எதனால்? கண்ணீர்த்துளியால், கண்ணீர்த்துளி சர்வாதிகாரிகளைச் சாய்த்திருக் கிறது. கண்ணீர்த்துளி பல இடங்களிலே ரத்தத் துளிகளை வரவழைத்திருக்கிறது. கண்ணீரை அலட்சியப்படுத்தியவர்கள் தங்கள் கழுத்திலிருந்து தலைக்கு விடுதலை கொடுத்தவர்களானார்கள். 'ஏழை அழுத கண்ணீர் கூறிய வாள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/7&oldid=1688623" இலிருந்து மீள்விக்கப்பட்டது