பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

123


பத்திரிகையில் படித்தோர் அனைவரும் நாட்டுப் பற்றின் உரிமை வேட்கைகளை அனுபவித்தக் காலம் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகை வெளிவந்த நேரம்.

இந்தப் பத்திரிகை 1926-ஆம் ஆண்டில் இட்டா பார்த்தசாரதி நாயுடு பெற்ற மக்களால் நிறுவப்பட்டு, பூதூர் வைத்திய நாத ஐயரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்தது.

இந்த விகடனில் கவிமணி தேசியக விநாயகம் பிள்ளை, நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, தம்பையா, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பி.ஸ்ரீ., தேவன், துமிலன் ஆகியோரது எழுத்துக்கள் மக்களின் உள்ளங்களில் தேசிய உணர்வுகளை ஊட்டின.

மக்களின் அடிமைத்தன வேதனைகள் ஒருபுறம், வேடிக்கை நிகழச்சிகள் ஒருபுறம், கேவி அழும் ஏழைகள் ஓலம் ஒருபுறம், கேலிச் சிரிப்பு ஒரு புறம். பரிகாசம் ஒரு புறம். பாட்டாலும், படத்தாலும் உருவாகும் கட்டுரைகள் ஒருபுறம் ஆகியவற்றை ஏற்று, ‘ஆனந்த விகடன்’ ஏடு மக்களை விழிப்புறச் செய்து வந்த பத்திரிகையாக அன்று வெளிவந்தது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் நாட்டின் சுதந்தரப் போருக்குரிய வித்துக்களாக விளங்கின. இந்தப் பணிகளை விகடன் அன்றும் செய்து புகழ் பெற்றது. ஆனால், இன்றும் அதே ஆனந்த விகடன் பல குட்டி விகடன்களை ஈன்றுள்ளது. “ஜூனியர் விகடன்” ‘சுட்டி விகடன்’ ‘அவள் விகடன்’ ‘சக்தி விகடன்’ என்ற குட்டிகளாகப் பல்கிப் பெருகி, பத்திரிகைக் சந்தையிலே, பணமணத்தை நுகர்ந்து வலம் வந்து கொண்டிருக்கின்றன. இது இன்றைய ‘விகடன்’ நிலை. துடிப்புடன் துணிவுடன் செய்து வருவதை நாம் பார்க்கின்றோம்.

சங்கு சுப்பிரமணியன்

‘சுதந்திரச் சங்கு’ ஏடு!

சங்கு சுப்பிரமணியம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1932-33-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பத்திரிகை ‘சுதந்திரச் சங்கு!’ இந்தப் பத்திரிகை விலை என்ன தெரியுமா? மூன்று