பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


- என்று பாவேந்தார் பாரதிதாசன் அவர்கள் ‘திராவிடன்’ என்ற இனப் பெயர் ஏன் என்று என்னைக் கேட்டால், நான்தான் திராவிடன் என்று கூறுவேன் என்று அருமையாக, பெருமையா திராவிடர் இன வரலாற்றை, ‘திராவிட நாடு’ என்ற இனப்பெயர் கொண்ட கவிதைப் பகுதியில் பக்கம் 212-213ல் கூறியுள்ளார்.

இந்தியா என்று உலக மக்களால் அழைக்கப்படும் பரத கண்டத்தில் பல மாநிலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று சென்னை மாநிலம். அறிஞர் அண்ணா அவர்கள் 1967-ஆம் ஆண்டில் முதல் அமைச்சரான பிறகு, தமிழர் இலக்கிய மரபுக்கேற்ப அதற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிட்டார்.

தந்தை பெரியார் அகில இந்தியத் தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தை விட்டு வெளியே வந்த பிறகு, சுய மரியாதை இயக்கம் என்ற ஓர் அமைப்பைக் கண்டு, பிறகு அது அண்ணா அவர்கள் தீர்மானத்திற்கேற்ப, திராவிடக் கழகமாக மாற்றப் பட்டது. அந்தத் தாய்க் கழகத்திலே இருந்து தோன்றியதுதான் திராவிடரியக்கம்.

பாவேந்தர் பாரதிதாசன் பாடியுள்ள மேற்கண்ட பாடல் தமிழ் மக்களாகிய திராவிடர் என்ற ஓர் இனத்தின் பெருமை மிக்க வரலாற்றைப் பற்றிய பாடலாகும். தமிழர்கள் திராவிடர்களா? இந்திய மக்களில் வேறோர் இனத்தவரா? என்ற இன வேறுபாட்டை, வடபகுதி வாழ் இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டுதோறும் இன்றுவரைக் கொண்டாடி வரும் ‘இராம லீலா’ என்ற புராண விழாவே அதற்குத்தக்க சான்றாகும்.

திராவிட மாவீரன் இராவணன் என்ற தென்னிலங்கை வேந்தனை, இராமன் என்ற ஆரிய மன்னன் தீயிட்டு எரிக்கும் இனப் படுகொலை நிகழ்ச்சியை வட இந்திய மக்களைக் கோலாகலமாகக் கொண்டாட விட்டுவிட்டு, 26.10.74 அன்று நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் இந்தியக் குடியரசு தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது அவர்களும், இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தி அவர்களும் கலந்து கொண்டாடுகிறார்கள் என்றால் இது மதச் சார்பற்ற நாடா?

“பல இலட்சக்கணக்கான தென்னிந்திய, தமிழ்நாட்டு திராவிட மக்கள் தங்களை அந்த விழா அவமானப்படுத்துகிறது;