பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152



சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்



தமிழ்நாட்டில் வன்மையான பேச்சாளராக, வேகமான பத்திரிகை ஆசிரியராக, மென்மையான சட்ட மேலவைத் தலைவராகத் திகழ்ந்த சிந்தனை சிற்பி சி.பி. சிற்றரசு, 16.2.78ஆம் ஆண்டில் சிட்னி நகரில் இயற்கை எய்தினார்.

அப்போது முதல் அமைச்சாரக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவரது புகழுடலை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, உறவினரிடம் ஒப்படைத்தார். வாழ்க சிற்றரசு பத்திரிகைத் தொண்டு.

‘தனியரசு’ நாளேடு’

ஏ.வி.பி. ஆசைத்தம்பி

தந்தை பெரியார் பேச்சுப் பாணியைப் போலவே பேசும் ஆற்றல் ஏ.வி.பி. ஆசைத்தம்பிக்கு இருந்தது. அதனால் ஏ.வி.பி. பேசுகிறார் என்றால் பெரியார் பேசுவதாக எண்ணிச் சென்று கேட்டவர்கள் ஏராளம் பேருண்டு.

பெருந்தலைவர் காமராசர் தோன்றிய விருதுநகரிலே பிறந்தவர் ஆசைத்தம்பி. இளம் வயதிலேயே திராவிடர் இயக்க எழுத்தாளர் ஆனார். பேச்சாளரானார். எழுத்து வன்மை கொண்ட சிந்தனையாளர். ‘தனியரசு’ என்ற நாளேட்டை நடத்திக் கட்சித் தொண்டு புரிந்தார். பரப்பரப்பூட்டும் கட்டுரை எழுத்தாளர் அவர்.

சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆசைத்தம்பி.

ஆசைத்தம்பி எழுத்து வன்மைக்கு சான்று கூற வேண்டுமானால், அவர் எழுதிய ‘காந்தியார் சாந்தியடைய’ என்ற ஒரு சிறு நூலைக் கூறலாம். அந்த நூலைக் காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. ஏன் தெரியுமா?

‘பாம்பையும், பார்ப்பானையும் கண்டால்....... பாம்பைக் கொல்லாதே’ என்று ஒரு பழமொழி இன்றும் புதுமொழியாக இங்கே இருக்கிறது. கருப்புச் சட்டைக்காரன்