பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

சமுதாய விடுதலைப் போரில் திராவிடர் இயக்க இதழ்கள்


படைத்தவர் கண்ணதாசன்! அதாவது வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தை மனம் படைத்தவர் கண்ணதாசன். அரசியல் உலகில் மட்டும் அவர் புகாமல் இருந்திருந்தால் அவரும் ஒரு தேசிய பாரதியாராகி இருப்பார் என்பதுதான் உண்மை!

அருளாளர் அருணகிரி நாதருக்குப் பிறகு, கம்பனையும், கவிழ்த்துப் புறங்கண்டு ‘சந்தம்’ பல கண்டவர் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள். அவரைப் போல கவிஞர் கண்ணதாசனும் தனது ஏழெட்டாயிரம் சினிமா, இலக்கியம், இயேசு காவியம் பாடல்களில் பலவித சந்தங்களை அனுபவித்துப் பாடியவர்! அரசியல்தான் அவரது அழுக்காற்றுக்கு அடையாளமாகி, கவிஞானத்தை ஏப்பம் விட்டு விட்டது!

அத்தகையச் செஞ்சொற் கவிதை ஞானத் திறமையாளரான கண்ணதாசன் அவர்களைப் பத்திரிகை ஆசிரியராக பெற்ற ‘தென்றல்’ வார இதழும், ‘தென்றல்’ மாதத் தாளிகையும், ‘கண்ணதாசன்’ என்ற இலக்கிய இதழும் தமிழ்த் தொண்டு செய்து வெற்றி பெற்றன! ‘தென்றல்’ வார இதழில் கண்ணதாசனின் வெண்பா போட்டி எண்ணற்ற இளம் தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கியது! அதற்குக் கவிதை உலகம் என்றும் நன்றியாற்றும்!

‘தென்றல்’ பத்திரிகை ஆசிரியராக மட்டுமே பணியாற்றியவர் அல்லர் கண்ணதாசன்! வணங்காமுடி, நவசக்தியிலிருந்து வெளிவந்த கடிதம் போன்ற அரசியல் ஏடுகளுக்கும் அவர் ஆசிரியராக இருந்து தமிழ்ப் பணி செய்த தமிழ்த்தும்பி அவர். இயேசு காவியம் அவர் சேகரித்த பைந்தமிழ்த் தேனடை ஆகும்.

இவைத் தவிர, எண்ணற்ற தமிழ்நூல்களை, அதாவது அர்த்தமுள்ள இந்துமதம், வனவாசம், போல - புராண, இதிகாச வரலாற்று ஆய்வு, இலக்கிய நூற்களை கவிதையாகவும், உரைநடையாகவும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

மகாதேவி, ஆடிப்பெருக்கு, தெனாலிராமன், சிவகங்கைச் சீமை, கறுப்புப் பணம், மாலையிட்ட மங்கை போன்ற திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதிய பத்திரிகை ஆசிரியர் ஆவர்.

கவிஞர் கண்ணதாசன் வயது ஏற ஏற சிரம் பழுத்த ஞானியாகவும், ஏறக்குறைய ஐயாயிரம் திரையுலகப்