பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

 157



கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ்நாட்டில் நான்கு முறை முதல் அமைச்சராக இருந்தவர்; ஏறக்குறைய 14 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஆட்சி செய்த மும்முடிச் சோழனாவார். அவர், முத்தாரம் என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்து அரிய படைப்புகளை வழங்கியவர்.

இவை மட்டுமா? வீர அபிமன்யு, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, பராசக்தி, பூம்புகார், மனோகரா, கண்ணம்மா, மண்ணின் மைந்தன் போன்ற 60 திரைப்படங்களுக்கு வசன கர்த்தாகவாக விளங்கித் திரைவானின் துருவ நட்சத்திரமாக வாழ்பவர்.

அரசியல் துறையில் அரசினர் தடைகளைத் தவிடு பொடியாக்கி, அடக்குமுறைகளை வீழ்த்தி ஆண்டுக் கணக்கில் சிறை கண்டவர். பத்திரிகை உலகுக்கு இன்றும் ஒரு சிரஞ்சிவி மூலிகையாக வாழ்ந்து வருபவர் என்றால், இவை எல்லாம் வரலாறே தவிர மிகை புராணமன்று.

கண்ணதாசன்

‘தென்றல்’

உடுமலைப்பேட்டைக் கூட்டம் ஒன்றில் கவிஞர் கண்ணதாசன் மேடையில் தன்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொண்டார் தெரியுமா? ‘வட்டிக்கு வட்டி வாங்கும் மட்டிப் பயல்கள் வாழும் செட்டி நாட்டு மண்ணில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்!’ என்றார்.

கவிஞர் கண்ணதாசன் இலக்கிய உலகில் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரைப் போன்றவர்! நாவலர் தமிழ்க் கடல்; தமிழ்த் தொண்டர்; வீர சைவ வித்தகர்; வல்லாண்மை படைத்த நல்லாண்மை மிக்க, சான்றாண்மை மிதக்கும் தமிழ் ஞானி!

அந்தச் சான்றோன் உணர்ச்சி வசப்பட்டு ஆன்ம ஞான சீலரான வடலூர் வள்ளல் பெருமான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களை படித்த பின்பும், வள்ளலார் பாடல் அருட்பா அன்று மருட்பா என்று கடலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்ற வளாகத்துள் வள்ளலார் நுழைந்தபோது, நாவலர் பெருமானும் எழுந்து நின்றாரே, அத்தகைய ஒரு பண்பு