பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

199



மகாலிங்கம்

‘ஓம் சக்தி’

பொள்ளாச்சி தொழிலதிபர் டாக்டர் நா. மகாலிங்கம் ‘ஓம் சக்தி’ என்ற இதழுக்கு கெளரவ ஆசிரியராக இருப்பவர். ‘கல்கி’ துணை ஆசிரியராக இருந்த பகீரதன் ஓம் சக்தி ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார்.

டாக்டர் மகாலிங்கம் சிறந்த எழுத்தாளர், தேர்ந்த இலக்கிய ஆராய்ச்சியாளர், அருமையாகப் பேசும் ஆற்றலுடையவர். தமிழ் மொழி வளர்ச்சி, ஆன்மிக ஆய்வு, வரலாற்று ஆய்வு, மொழி ஆய்வு நோக்கு; ஆகிய எல்லாச் சிறப்புகளையும் பெற்ற தமிழ்ப் பண்பாளர். சிறந்த எழுத்தாளர்! கற்றவர்களுக்கு கற்கண்டு கட்டுரை வழங்குபவர்!

“ஓம் சக்தி” பத்திரிகையில் தனது ஆராய்ச்சி முடிவுகளை, சீரிய சிந்தனை வெளிப்பாடுகளைத் தொடர்ந்து எழுதி வரும் திறமையாளர். ஆசிரியர் பகீரதன் ஓம் சக்தியில் தொடர்ந்து தொல்காப்பிய ஆராய்ச்சிக்கருத்துக்களை எழுதியவர். ஓம் சக்தி இதழில் ஆன்மிக கட்டுரைகள் வெளிவருவதோடு, சிறப்பாக, வள்ளல் பெருமானைப் பற்றிய அரிய சிந்தனைகளும் இடம்பெறுகிறது. மேல் நாட்டு இலக்கிய மொழி பெயர்ப்புகள், அறிவியல் அறிஞர்கள் வரலாறு; சிந்தனைக்குரிய சிறந்தக் கட்டுரைகள், வேதாத்திரி மகரிஷியின் தத்துவ ஆராய்ச்சிகள் அனைத்தும் ஓம் சக்தியில் இடம் பெற்ற அறிவுச் சோலையாக மணக்கும் இதழாகும்.

சிலம்புச் செல்வரின்

‘செங்கோல்; தமிழ் முரசு’

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிலே ஒருவராக உருவானவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம். இராஜாஜியின் கருத்தை ஆதரிப்பவர். ம.பொ.சி. சிறந்த நாவன்மை பெற்றவர். அவர் பேசும் மேடையில் எதிர்கட்சிக்காரன் கேட்கும் வினாவை இவரே கேட்டு, அதற்கு அவரே பதிலளிக்கும் பாணி ம.பொ.சி. மேடை பேச்சு பாணி! இதுவரை