பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

ஆறு நாடுகளின் உருவாக்கமே நமது குடியரசு சட்ட அமைப்பு



1930-ஆம் - ஆண்டிலேயே நமது
குடியரசு நாளைக் கொண்டாடினோம்!

அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கப் பேரவை, 1885-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டுதோறும் காங்கிரஸ் இயக்கப் பேரவை, இந்திய மாநிலங்களின் முக்கிய நகரங்களிலே கூடி அதன் ஆண்டு விழா நடவடிக்கைகளை ஆராய்ந்தும், மேற்கொண்டு என்ன திட்டங்களைத் தீர்மானித்துச் செயலாற்றலாம் என்பதை; அதன் தலைவர் பெருமக்கள் கூடி, நாடு முழுவதுமுள்ள தேசியக் காங்கிரஸ் தொண்டர்களையும் அழைத்து, ஒரு மாநாடு போலத் திரண்டு கலந்துரையாடுவது வழக்கம்.

அதற்கேற்ப, அகில இந்திய தேசியக் காங்கிரஸ் பேரவை 1930-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்திலே உள்ள லாகூர் என்ற மாநகரில் கூடியது.

அந்தப் பேரவையில், நீதி, பொருளாதாரம், அரசியல் அமைப்பு, சுதந்தரம் தன்மை, அதற்கான கருத்துகள், பிரார்த்தனை, நம்பிக்கை, சமத்துவம், சுய கெளரவம், தேசிய ஒற்றுமை, இந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைக் குறித்து மாநாட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் பேரவைத் தலைவர்கள் கலந்துரையாடினார்கள்.

இறுதியாக எடுத்த முடிவில், 1929-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் நாள் நள்ளிரவிலிருந்து, ஜனவரி 1-ஆம் நாள், 1930-ஆம் ஆண்டு விடியற் காலைக்குள், மூவண்ணத் தேசியக் கொடியை நாட்டு மக்கள் முன்னிலையில் ஏற்றி, ஓர் உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

அந்த உறுதி மொழிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26ஆம் நாளைக் குடியரசு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே அந்த மாநாட்டின் தீர்மானமாயிற்று.

இந்திய அரசியலமைப்புக் கூட்டம் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதியன்று கூடியது. இந்த அமைப்பு