பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

256

பத்திரிகை மன்றம் ஏன்? எதற்காக? எப்படி?



“பத்திரிகைகள்
தரத்தோடும்
பொறுப்போடும்
நடந்து கொள்ளல் வேண்டும்”

என்று கூறியுள்ளது; இது, உண்மையான ஓர் ஆய்வுக் கண்ணோட்டம்தான் என்பதிலே, இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. பத்திரிகைக்குத் தங்களது, வாழ்க்கையைத் தியாகம் செய்து வறுமையோடு வாடியவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்.

பத்திரிகைக் குழு:

பத்திரிகைகளுக்குரிய மரியாதை மதிப்பும்; ஒழுக்கம் ஓம்பும். பண்புடனும் அதன் சுதந்திரத்தைக் காட்டிக் காக்க வேண்டும்.

இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சி அமைய வேண்டும். அமைந்ததும், தொண்டு மனப் பான்மையை வளர்க்க வேண்டும்.

இந்த நிலை வளர வேண்டுமானால், ஒரு பத்திரிகை மன்றத்தை Press Councilலை அமைத்தாக வேண்டும் என்று நியமிக்கப்பட்டிருந்த Press Commission குழு கூறியிருந்தது.

உலகத்தில் முதல்முறையாக 1916-ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டில் தான் பத்திரிகை மன்றம் தோன்றியது. பிறகு, உலக நாடுகளில் 40 பத்திரிகைக் கிளை மன்றங்கள் அமைந்தன.

சட்டத்தின் பயன் :

பத்திரிகைக் குழுவின் பரிந்துரைக்கேற்ப, நாடாளுமன்ற மக்களவையில் பத்திரிகை மன்ற மசோதா அப்போது கொண்டு வரப்பட்டது. அந்த நேரத்தில் 1957-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்தது. அதனால், நாடாளுமன்றம் கலைந்தது: மசோதாவும் சட்டமாகாமல் நின்றது.

எட்டாண்டு கழிந்தது. தேசிய ஒற்றுமை மன்றம், National integration council பத்திரிகைகளுக்கென ஒரு மன்றம் அமைக்க