பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

281


போல ஓடியாடி உழைப்பவர்கள்’ என்கிறார். பழநியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட ‘செய்திகள்’ என்ற நூலில் திரு. எம். செல்லையா என்பவர்.

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? ஒரு பத்திரிகையின் அடிப்படைக் காரணமாக இருப்பவர் Reportersகளே ஆகும்! இவர்களுக்கு நிருபர் என்று பெயர்தானே தவிர, இந்த செய்தியாளர்கள் தேனியைப் போல பறந்து பறந்து ஒவ்வொரு மலர்களையும் ஊடுருவதைப் போல, ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் செய்தி என்ற தேன் துளிகளைத் திரட்டும் கலைஞர்களாக உள்ளவர்களே செய்தியாளர்கள்!

‘தினமணி’ நாளேட்டின் சிறந்த செய்தியாளராகப் பணியாற்றியவர் திரு. ஏ.என். சிவராமன் என்ற வார்த்தைச் சித்தர். போர்க் காலக் களங்களில் செய்திகளைச் சேர்த்திட இந்தியா வந்தவர்தான் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருமுறை இருந்த வின்ஸ்டன் சர்ச்சில்.

எனவே, செய்தி திரட்டுவது என்பது அவ்வளவு சுலபமான பணியன்று. கடலில் மூழ்கி முத்தெடுப்பதைப் போல, ட்சுனாமி என்ற கடல் பேரழிவுக்கும் அவர்கள் அஞ்சாமல் பணியாற்ற வேண்டியவர்களாவர்.

அமெரிக்காவில் மெல்வைல் இ. ஸ்டோன் என்பவர் அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) என்ற ஒரு செய்தி நிறுவனத்தை அமைத்தபோது, ‘ஓர் ஆசிரியரின் அறிவைவிட செய்தி சேகரிப்போர் அறிவு செல்வாக்கும் சிறப்பும் உடையது’ என்று குறிப்பிட்டார்.

சமுதாயத்தில் நடமாடும், ஒவ்வொரு மனிதனும் செய்தியாளன்தான்! அவனவன் அறிவுக்கு ஏற்றவாறு மக்களிடையே செய்திகளைப் பரப்பி விடுவான். ஆனால், அவன் செய்வது செய்தியாளன் பணியன்று. வதந்தியாளன் செயலாகவும் (Rumour) இருக்கக் கூடுமில்லையா? அதனால், அவரைப் போன்றவர்களல்லர் செய்தியாளர்கள். மக்களே போல்வர் ‘கயவர்’ என்றார் திருவள்ளுவர் பெருமான் - கயவர்களை அடையாளம் காட்டும்போது. அதுபோலவே வதந்தி பரப்புவோனும் வேறு மனிதனைப் போலவே நடமாடுவான்.