பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

293



கம்பியில்லாத தந்தி, தொலைபேசி, கடலடித் தந்தி (cable), டெலி பிரிண்டர், டெலக்ஸ் (Telex) முறைகள் செய்திகளை உலக நாடுகளுக்கு அனுப்பிட வசதியாக உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலமாக பிற நாடுகளுக்குரிய செய்திகளை அந்தந்த நாடுகளின் நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றன.

பத்திரிகையாளரான நாம், அந்த நிறுவனங்களின் உறுப்பினரானதால் அவை கட்டணம் பெற்றுக் கொண்டு நமக்கு உலகச் செய்திகளைத் தருகின்றன. இவ்வளவு வசதிகள் செய்திகளைப் பரிமாற இருந்தும்கூட, தற்போது விண்வெளித் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலமாக செயற்கைக் கோள் செய்தி அனுப்பும் முறையில் (Satellite) நேர் படி ஒளிப்படம் அனுப்பும் முறை (Facsimile Transmission)யால் தகவல் அனுப்புவதும் பெறுவதுமான புதிய முறைகள் உருவாகியுள்ளன.

அவற்றாலும் உடனுக்குடன் நிமிடங்கள் கணக்க்கில் உலகச் செய்திகளைப் பெற்று வருவதும், அனுப்புவதுமாக செய்தித் துறை நிறுவனங்கள் வளர்ந்து விட்டன. அதனால் செய்திப் பத்திரிகை வளர்ச்சியும் நாள்தோறும் முன்னேறி வரும் காட்சிகளைக் காண்கின்றோம்.

உலகத்தின் முதல் செய்தி நிறுவனத்தை அமைத்தவர் சார்லஸ் ஹாவாஸ் என்ற ஒரு பிரெஞ்சுக்காரர். அவர் 1825-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஒரு செய்தி நிறுவனத்தை அமைத்து, அந்த நிறுவனம் தற்போது உலகெங்கும் பல கிளை நிறுவனங்களைத் தோற்றுவித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அந்த நிறுவனம் பத்தாண்டுகளுக்குள் நல்ல செல்வாக்குடன் வளர்ந்து செய்திகளை வழங்கி வருகிறது.

இலண்டன் நகரிலே உள்ள ராய்டர் செய்தி நிறுவனத்துடன் பங்கு கொண்டு, அவற்றிலிருந்து செய்திகளைப் பெற்றதுடன், 1875-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) என்ற நிறுவனத்துடன் செய்திகளை வழங்கும் பணியை வெற்றிகரமாகச் செய்து வருகின்றது.

அதே பிரெஞ்சுக்காரர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி பெர்னார்டு உல்ஃப் என்பவர், 1848ல் ஜெர்மன் நாட்டில் ஒரு செய்தி நிறுவனத்தை ஆரம்பித்தார். இவர் முதன் முதலாக வணிக