பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

335


அல்ல” என்ற அறிவியல் ஞானி ஐன்ஸ்டினுடைய ஆய்வுக் கொள்கை, எழுதுகோல் ஆற்றலுக்கும், அதன் சீர்த்திருத்த மக்கட் தொண்டுகளுக்கும், வாசகர் வட்டங்களுக்கும், ஒன்றுடன் ஒன்று சார்ந்து பொருந்துகிறதல்லவா?

எனவே, தனி நிலை இயல்புகள் உடையன அல்ல ஒரு பத்திரிகை வளர்ச்சிகள்! அலுவலக வேலைப் பையன் முதல் - நிர்வாகப் பொறுப்பாளர் உட்பட்டவர்கள் வரை ஒன்றை ஒன்று சார்ந்தக் கூட்டுறவு நோக்கத்தின் ஊக்கப் பணிகளின் ஆக்க வடிவம் தானே பத்திரிகை வளர்ச்சி?

சிறந்த பத்திரிகை ஆசிரியர் என்பவர், அவருடன் பணியாற்றுபவர்களிடம் அன்பும், பண்பும் காட்டி; ஆர்வத்தோடு பணிபுரியும் உணர்ச்சியை ஊட்டும் (Nurse) தாயாகத் திகழ வேண்டும். குழந்தைகளைக் காப்பாற்றவும், கல்வி புகட்டவும், நியமிக்கப்பட்ட Nursing governess போல அலுவலகப் பணியாளர்களைப் பாதுகாத்தால், பத்திரிகை மனமாச்சர்யங்கள் அலுவலகம் உள்ளே முளைவிடாது.

ஆசிரியர் எனப்படுபவர் எந்த நேரத்தில் எந்த சிக்கல் வந்தாலும் அவற்றை ஏற்கும் வைர நெஞ்சினராய் திகழ வேண்டும்.

தனக்குச் சரி என்று உணரப்பட்டதை, தலையே துண்டித்து விழும் நிலை வந்தாலும், பண்டைய கிரேக்க வீரன் ஹெர்குலிஸ் (Hercules) அல்லது இரும்பு இதயமுடைய மாவீரன் நெப்போலியனைப் (Naopoleon) போல நெஞ்சுரம் பெற்றவராக இருக்க வேண்டும்.

பத்திரிகை ஆசிரியன் பொது மக்கள் தோழனாக நட மாட வேண்டும். அவர்கள் தேவைகளை உணர்ந்து, நிலைகளுக்கு ஏற்றவாறு அவரது எழுதுகோல் திறமைகள் அற்புதமாட வேண்டும்.

அரசியல் தலைவர்கள், சமுதாயச் சான்றோர்கள், கல்விமான்கள் தொடர்புகளோடு ஆசிரியர் ஒன்ற வேண்டும். அவர்களது மக்கட் தொண்டுக் கருத்துக்களை அலசி ஆய்ந்து