பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

பத்திரிகைகள் தோன்றும் முன்பு செய்திகள் எப்படிப் பரவின!


அறிவுலகப் பரபரப்புச் செய்தியாக மாறிப் பரவியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பிற கணித மேதைகளும், மக்களும் ஆற்றொணா வேதனைப்பட்டார்கள்! அந்தச் செய்தி உலகையே உலுக்கி விட்டது.

ஆர்க்கிமிடீஸ் தலை வெட்டப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்ட அப்பலோனியஸ் Appollonius என்ற கணித மேதை, அந்த உயிர் கொலையைச் சவாலாக ஏற்று கி.மு. 240ல் நீள் வளைவு, பர வளைவு, மிகு பரவளைவு (Elipse, Perebola, Hyperbola) என்ற கணிதப் புதுமைகளைக் கண்டுபிடித்து ஆர்க்கிமிடீஸ் வெட்டுண்ட செயலுக்குப் புகழேற்றி நடமாடினார்.

இந்தக் கண்டுபிடிப்புக்களை அறிந்த ஊர் மக்கள், ‘சைரக்ஸ், மன்னன் அப்பலோனியஸ் இப்போது அறிஞர்கள் தலைகளை வெட்டுவானா?’ என்று சவால் விட்டு அந்நகரையே ஊர்வலமாகச் சுற்றி வந்த செய்தி கலவரமாக மாறி; நகரையும், அடுத்தடுத்துள்ள ஊர்களையும் அன்று திணறடித்த செய்தியாக நிலவியது.

பண்டைய கிரேக்க மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு இறந்தவர்கள் ஆவியே காரணம் என்று நம்பி வந்த மூட நம்பிக்கைச் செய்திகளை முறியடித்தவர் ஹிப்பாகிரடஸ் Hyppocratus என்ற மருத்துவ மேதை.

அவர் மனித உடலில் உள்ள ரத்தம், கபம், கரும் பித்தநீர், மஞ்சள் பித்த நீர் Blood, Phlegm, Black bile, Yellow bile ஆகியவை இருக்க வேண்டிய அளவுக்கு இருந்தால், நோய்கள் மக்களை அண்டாது என்ற புரட்சிக் கருத்தைக் கூறினார்.

இந்தச் செய்தி மருத்துவத்தில் ஒரு புதிய திருப்பு முனையை உண்டாக்கியதால், மக்கள் அதைப் பெரிதும் வரவேற்று, ஊர் ஊராக இந்தச் செய்தியை அக்கால மக்கள் மூட நம்பிக்கையை வீழ்த்திப் புகழ் பெற்றன்ர். மருத்துவத் துறையில் அறிவியல் பூர்வமான இந்தச் செய்தி, அந்த நேரத்தில் மருத்துவ உலகுக்கும் மக்களுக்கும் ஒரு புது சிந்தனை வித்தை ஊன்றியது.