பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

வள்ளலார் இலக்கண நுட்பமும் தேவை!



“ஒன்றூனமான பத்து ஒன்பது : அஃது அக்காலத்துச் சொல் என்கிறார் மயிலை நாதர் என்ற நன்னூல் உரையாளர்.

திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் பாடியத் ‘தனிக்குறுந்தொகை’, என்பதின் ஒன்பதாவது பாடலில் :

                         ‘ஒன்ப தொன்பது யானை யொளிகளி
                          றொன்ப தொன்பது பல்களஞ் சூழவே
                          ஒன்ப தாமவை தீத்தொழி லின்னுரை
                          ஒன்ப தொத்துநின் றென்னு ளொடுங்குமோ’

என்ற பாடலில், நான்காவது அடியிலுள்ள ‘ஒன்பதொத்து நின்றென்னுளொடுங்குமே’ என்னும் வாக்கியம், “என்னுடைய உரைகள் எவ்வளவு விரிந்து அமைந்தாலும், முடிவில் என் ஆணவ நிலையில் என் உள்ளத்தே ஒடுங்கும்” என்னும் பொருளைக் கொண்டது என்று திருத்தொண்டர் புராண உரையாசிரியர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் பின்வருமாறு கூறுகிறார்.

என் பேச்சுக்கள் முதலிய எல்லாம் எவ்வளவு விரிந்து சூழினும், முடிவில் ‘நான்’ என்ற அகங்கார நிலையினவாய், என்னையே சுற்றி என்னகத்தே அடங்கும். அது ஒன்பது என்னும் எண்ணினைப் போலவே

இது எப்படி என்றால், ஒன்பதை எதனால், எத்தனை முறை பெருக்கினாலும், பெருக்கி வந்த எண்ணில் உள்ள எண்களைக் கூட்டினால் ஒன்பதே வரும் என்பதைப் போல.

9 x 2 = 18 = 8 + 1 = 9 9 x 3 = 27 = 2 + 7 = 9
9 x 4 = 36 = 6 + 3 = 9 9 x 5 = 45 = 4 +5 = 9
9 x 6 = 54 = 5 + 4 = 9 9 x 7 = 63 = 6 + 3 = 9
9 x 8 = 72 = 7 + 2 = 9 9 x 9 = 81 = 8 + 1 = 9
9 x 144 = 1926 = 1 + 2 + 9 + 6 = 18 = 1 + 8 = 9

ஒன்பது என்ற எண் ஒன்று, இரண்டு போன்ற மற்ற எண்களைப் போலத் தனக்கென்று ஒரு தனிப் பெயர் இல்லாமல், பின்வரும் பத்து என்பதில் ஒன்று குறைந்தால் எதுவோ, அது என்று தெரிந்து கொள்ளுமாறு பெயர் கொண்டிருத்தல், பின்வரும் பாசமாகிய உலகமும், முன்நிற்கும்