பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

53




உலகப் புகழ் பெற்ற அந்த சிறுவர் இலக்கிய சிறுகதை மேதை; இந்தியாவிலுள்ள லாகூர் நகரிலிருந்து வெளிவரும் ‘சிறுவர் மிலிடரி கெசட்’ என்ற பத்திரிகையில் தொடர் கதைப் பகுதி ஆசிரியராகச் சேர்ந்தார்.

இதற்குக் காரணம், ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிவிட்ட ஓர் ஆங்கிலேயச் சிற்பியின் மகன் அவர் என்பதால், கிப்ளிங் ‘சிவில் மிலிடரி கெசட்’ பத்திரிகை ஆசிரியரானார். அவரது எழுத்துக்களைப் படித்த 19ம் நூற்றாண்டின் வாசகர்கள் இதோ ஒரு புதிய எழுத்தாளர் தோன்றியுள்ளார் என்று அவரை பாராட்டலானார்கள்.

இந்தியாவில் எழுதிப் பெயர் எடுப்பதைவிட, இங்கிலாந்தில் பெயரெடுத்தால், அது உலகப் புகழாக மாறும் என்று கருதிய கிப்ளிங்; 1889ம் ஆண்டில் இலண்டன் மாநகர் சென்றார்.

தனது கப்பல் பயணத்தைக் கிப்ளிங் கட்டுரைகளாக எழுதி, இந்தியாவிலே இருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘பயணீர்’ என்ற பத்திரிகையில் வெளியிடச் செய்தார்.

‘இலண்டன் டைம்ஸ்’ என்ற நாளேடு அவருடைய இந்திய நூற்களை எல்லாம் சிறப்பாக விமர்சனம் செய்து எழுதியதால், அவரது எழுத்துக்கள் உலகில் வானளாவும் புகழைப் பெற்றன.

கிப்ளிங், சிறுவர்களுக்கான சிறுகதைகளை ‘இலண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் எழுதினார். அந்தக் கதைகள் Just so Stories என்ற தலைப்பில் நூலாக வெளியானாது. பிரிட்டனுடைய பழைய வரலாற்றுப் பெருமைகளைச் சிறுவர்கள் சிந்தனைக்காக Pack of Pook’s Hill என்ற பெயரில் அவர் வெளியிட்டதும், மாணவ, மாணவிகள் இடையே அந்த நூல் பெரும் புகழ் பெற்றது.

அவர் எழுதிய கருத்துக்களை எல்லாம் - பத்திரிகைகளிலும் நூல்களிலும் படித்த உலக எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும், ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ்,