பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

55


Linis என்பவர். சிறந்த கவிஞராகவும், கட்டுரையாளராகவும், கதாசிரியராகவும் புகழ் பெற்றவர். இவர் 1862ம் ஆண்டில் பிறந்தவர்.

ஆக்டேவ் மிர்பியூ என்ற பத்திரிகையில் மேட்டர் லிங்க் எழுதிய பிரின்சஸ் மாலினி என்ற கதையைப் பாராட்டி, இதோ ஒரு பெல்ஜியம் சேக்ஸ்பியர் என்று மற்ற பருவ இதழ்கள் எழுதியதால், மேட்டர் லிங்க் புகழ் உலகெலாம் பரவியது. அந்த பத்திரிகையில் வெளி வந்த அவரது நாடகம், மக்கள் செல்வாக்கைப் பெற்றதால் பத்திரிகையின் விற்பனை அதிகமானது. அவர் எழுத்து மீது வேட்கை கொண்ட அந்த பத்திரிகை அவரை நாடகப் பகுதியின் விமர்சன ஆசிரியராக நியமித்துக் கொண்டது.

மேட்டர் லிங்க் நாடகங்கள் எல்லாம் மனித நேயத்தின் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் கண்ட நோபல் பரிசு நிறுவனம்; அவருக்கு 1911ம் ஆண்டில் பரிசை வழங்கிப் பாராட்டியது.

தாகூர் ‘கீதாஞ்சலி’யை
இலண்டன் வெளியிட்டது

கவிஞர் இரவீந்திர நாத் தாகூர் 1912ம் ஆண்டில் இலண்டன் மாநகரம் சென்று, புகழ் பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் பட்லர் ஈட்சையும், பெருங்கவிஞர் எஸ்ரா பவுண்டையும் சந்தித்தார்.

‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் தான் எழுதிய கவிதைகளை தாகூர் லண்டன் கவிஞர்களுக்குப் படித்துக் காட்டினார். தாகூரின் கற்பனைகளையும், கவிதைப் புலமைத் திறனையும் கண்ட அக்கவிஞர்கள், தாகூரிடம் இருந்த ‘கீதாஞ்சலி’ என்ற கவிதை நூலைப் பெற்று லண்டனில் ஹாரியத் மன்றோ என்ற பத்திரிகையாளர் நடத்தி வந்த ‘கவிதை’ என்ற பத்திரிகைக்கு அனுப்பி வெளியிட வைத்தார்கள்.

‘கீதாஞ்சலி’ கவிதையை, ‘கவிதை’ Poetry என்ற பத்திரிகையில் வெளியானதைக் கண்ட இங்கிலாந்தில் புகழ்