பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

57


வரலாற்று நூலை ஃபிரான்ஸ் எழுதினார். அந்த பொய் வழக்கை உடைத்தெறிந்து யூத தளபதி நிரபராதி என்று வாதாடும் வரலாற்று அடிப்படை நூல் அது. மக்கள் இடையே அந்த நாவல் மிகவும் பரப்பரப்பாக விற்பனையானதால், பத்திரிகையும் செல்வாக்கு பெற்றுவிட்டது.

‘எமிலிஜோலா’ என்ற எழுத்துலக அரிமா, ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற தலைப்பில் ஒரு மனுவை தயாரித்து, அந்தப் பொய் வழக்கிற்காக நீதிமன்றத்தில் வழக்காடிய வரலாறும் உள்ளது.

உலகப் புகழ் பெற்ற இத்தகைய ஒரு பொய் வழக்கை உடைத்தெறிந்த வரலாற்று நாவலை எழுதிய ஜாக்குவஸ் அனதோல் ஃபிரான்சிஸ் தைபால்ட்டுக்கு 1921ம் ஆண்டின் நோபல் பரிசு கிடைத்தது.

அயர்லாந்து பத்திரிகையாளர்
ஜார்ஜ் பெர்னாட்ஷா!

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நாடக ஆசிரியரான ஜார்ஜ் பெர்னாட்ஷா, 26.07.1856-ஆம் ஆண்டு அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் என்ற ஊரில் பிறந்தார்.

தனது 27வது வயதில் அவருக்கு இலக்கியத் துறையிலும், எழுத்துத் துறையிலும் இருந்த ஆர்வத்தால் 5 நாவல்களை எழுதி முடித்தாரே ஒழிய, ஒன்றுகூட புத்தகமாக வெளிவர முடியவில்லை. ஆனாலும், ‘ஷா’ தொடர்ந்து எழுதுவதிலேயே அக்கறை காட்டினார். ‘தி பால்மால் கெசட்’ “The Pall mall Gazette”என்ற பத்திரிக்கைக்கு அவர் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

கி.பி. 1885 முதல் 1888 வரை ‘தி வோர்ல்டு’ “The World” என்று அயர்லாந்தில் புகழ்பெற்றிருந்த் பத்திரிகையில் ஷா எழுதினார். இசை, நாடகம் ஆகியவற்றை விமர்சனம் செய்யும் பகுதியில் பணியாற்றிட ‘தி ஸ்டார்’ “The Star” என்ற பருவ இதழின் ஆசிரியர் வேண்டுகோளை ஏற்று விமர்சக ஆசிரியராக எழுதி வந்தார்.