பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


நேரத்தில் செய்து முடித்ததைக் கண்டு அவர்களது தந்தையும் - பிள்ளைகளும் மகிழ்ந்தார்கள்.

வில்பரும், ஆர்விலும் காலால் மிதித்து அச்சடிக்கும் Tradle அச்சு இயந்திரம் ஒன்றைக் கண்டுப்பிடித்தார்கள். பிறகு அச்சடிப்பதற்குரிய எழுத்துக்களையும் வாங்கினார்கள்.

‘குள்ளன்’ என்ற பத்திரிகை நின்று போன இப்போது அச்சு இயந்திர வசதிகளோடு ‘தி வெஸ்ட் சைடு நியூஸ் அதாவது மேற்கு திசைச் செய்தி The West Side News என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அதன் ஆசிரியர் பொறுப்பை வில்பர் ஏற்றார். நிர்வாகி ஆர்வில்!

‘மேற்கு திசைச் செய்தி’ மக்கள் இடையே நல்ல செல்வாக்குப் பெற்றதால், பன்னூறு பிரதிகள் துவக்கத்திலேயே, பரபரப்புடன் விற்பனையாயின. ரைட் சகோதரர்களிடம் இப்போது பண வறுமை இல்லை என்ற நிலை பிறந்தது.

பத்திரிகையாளர்களாக வாழ்க்கையைத் துவக்கிய ரைட் சகோதரர்கள்தான், தங்களது நுட்ப அறிவின் முதிர்ச்சிகளால், வானத்தில் பறக்கும் வானவூர்தியை, ஆகாய விமானத்தை 1903-ஆம் ஆண்டில் கண்டுபிடித்து வானத்தில் பறந்து காட்டினார்கள். ‘அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்பது திருவள்ளுவர் பெருமானது வாழ்வியல் பொய்யா மொழி அல்லவா?

பத்திரிகையாளர்களான ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த ஆகாய விமான அற்புதத்தை ‘வர்ஜீனியா பைலட்’ என்ற பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டது. அதன் நிருபர் மகிழ்ச்சி துள்ளி உலகத்திலுள்ள 21 பத்திரிகைகளுக்கு அந்தச் செய்தியைத் தெரிவித்தார். என்ன இருந்தாலும் பத்திரிகையாளர் சாதி அல்லவா? அதனால்!!

பாரீஸிலிருந்து வெளிவந்த ‘ஹெரால்ட்’ ‘Heralit’ என்ற பிரெஞ்சு பத்திரிகை, ஒன்று ‘பறப்பவர்களா? அல்லது பொய்யர்களா?’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதி ரைட் சகோதரர்கள் பறக்கவே இல்லை என்று ம்றுத்தது.