பக்கம்:இதழ்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இதழ்கள்

#26 இதழ்கள் எல்லாக் காரியத்தையும் முடித்துக் கொண்டு நிமிர்கை யில் நல்ல நேரமாகிவிட்டது. கட்டையை நீட்டி விட்டால் போறும். இன்றுதான் மாடிப்படிச் சுவரைப் புடிச்சுண்டு படி களை ஒண்ணெண்ணாய் ஏறினாள். அடேயப்பா என்ன அசதி அறைக் கதவு சாத்தியிருந்தது. மெதுவாய்த் திறந் தாள். 'யார் அது? விட முடியாது போ. இன்னியிலிருந்து நான் இங்கேதான் படுத்துக்கப் போறேன். இந்த ரூமை உனக்கு ஒண்ணும் குத்தகைக்கு விட்டுடல்லே, இது உனக்கு மாத்ரம்னு-’ பாக்கி வார்த்தைகள் முடியு முன்னேலேயே கதவை மூடினாள். சிரிப்புக்கூட வாரது. அம்மா ஏன் இப்படி தன்னைத் தானே முடுக்கிண்டு கத்தறார்? மாடியிறக்கத்தின் முதற் படியில் உட்கார்ந்தாள், கன்னத்தைக் கையில் தாங்கிக் கொண்டு. இன்னிக்கு நானே கொஞ்சம் சுருக்க, என்னாலும் தெரு கூட அடங்கிடுத்தே! இருளோடு இருளாய் இந்த மாதிரி இழைஞ்சிருக்கிறதும் இதமாய்த் தானிருக்கு. என்னவோ நான் என்கிற தன்மையின் பிரிவான தனி மையோ பொறுப்போ இல்லாமல், கர்ப்பத்தில் தூங்கும் சிசுப் போல் ஏகாந்தமான இருள் அவளைத் தன் வயிற்றுள் அடக்க மாய் அடக்கிக் கொண்டாற் போல் இதழ்களுக்குள் பூவுக்கு வயிறு கட்டியிருப்பது போல்...அப்பா சொல்லவா, அது களுக்கு என்ன கவலை? ஆபுசு என்னவோ குறைச்சல்தான். ஆனால் அதுகளுக்கு ஆயிசு வரை அழகும் சிரிப்பும்தான்...னு’ கீழே ஏதோ சாமான் உருண்டு சிந்தனையைக் கலைத்தது. போய்ப் பார்க்கலாமா, வேண்டாமா? என்னவாயிருக்கலாம்? ஒஹோ, சுவாமி பிரையுள் எலி, மாட்டிண்டு விக்ரஹத்தைத் தள்ளி விட்டிருக்கு. அம்மாதிரி அந்த சப்தத்தை அடையாளம் கண்டு கொண் டதுமே அன்த ப்ொட்டி அப்பொததான இரண்டு மாதங் களுக்கு முன்னால்நேர்ந்த ஒரு சம்பவம், நினைவு முழுக்கிலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/126&oldid=1247224" இலிருந்து மீள்விக்கப்பட்டது