பக்கம்:இதழ்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

13

இதழ்கள் #3

பேரிடமும் தனித்தனியாய் இருக்கும் சிறப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி அத்தனை பேரின் அடையாள உருவான ஒருத்தி ஒருநாள் நனவிலேயே, தானாவே அவன் மடியில் பட்சி மாதிரி வந்து விழுந்து விடுவாள் என்ற எதிர்பார்த்தலிலேயே தீர்மானமாகிவிட்ட ஒரு எண்ணம். ஆனால், அத்துடன், இத்தனை பேர் எனக்காக இப்படிக் காத்திருந்தும் நான் சின்னாவுக்குத் துரோகம் பண்ணாமல் இருக்கிறேனே, என்னைப் போலும் இவ்வுலகத்தில் உண்டா? என்று தன் காலில் தானே பூப்போட்டுக் கொண்டு, தன்னைக் கண்டே தனக்கு ஒரு பிரமிப்பு, மகிழ்ச்சி, 'ஆஹா' இப்படித் தான் ஏற்படுத்திக் கொண்ட மன நிலையில் கததைத் திறந்து, தேடி வந்தவளைக் கண்டதும் கொஞ்ச்ம் ஏமாற்றமாயிருந்தது. அவனையுமறியாமல் முகம்கூட சற்று கடுத்ததோ என்னவோ? என்னா சின்னா?” சின்னா கையைப் பிசைந்து கொண்டு நின்றாள், பயத்தில் கண்கள் வளையங்களாயிருந்தன.

  • பிருகாவைக் காணோமே!’ அவள் குரல் அழாத அழுகையில் நடுங்கிற்று.

கானோமா? குருவுக்கு இடது கண்ணின்கீழ், கன்னத்துச் சதை 'பட்பட்’ என அடித்துக் கொண்டது. ஒரு கையால் அந்த இடத்தை அமுக்கிப் பொத்திக் கொண்டான். எதிர் பாராதது ஏதேனும் கண்டாலோ கேட்டாலோ அவனுக்கு அப்படித் துடிக்கும். பயப்படாதே சின்னா! ஆனால், அவன் வயிற்றை குதிரைக் குட்டி விலுக் விலுக்கென்று உதைத்தது. வா உள்ளே, எப்போலேருந்து காணோம்? 'நீங்கள் கேட்டேளே அப்போதிருந்தே!-- அவனையுமறியாமல் பார்வை கைக்கடியாரத்தின்மேல் சென்றது. நேரத்தைக் கண்டு அமுக்கி வைத்திருந்த எஃகுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/13&oldid=1247292" இலிருந்து மீள்விக்கப்பட்டது