உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

143

இதழ்கள் 3.

ஆனால் அம்மாவுக்கு இன்னொரு குழந்தை பிறந்ததும் என் ஏக்கங்கள் பொறாமைகள் எல்லாம் எங்கோ மந்ைந்து விடுகின்றன. மனம் எப்படி என்ன சமாதானத்தை அடைந்ததோ? அறியேன். என் உடம்பு சுருக்கத் தேறி, این خ. என்னைப் பள்ளிக்கூடத்தில் பையன்களெல்லாம் டேப் உளுந்து வடை' என்று அழைக்கிறார்கள். x X X கான் விளையாடிவிட்டு வீடு திரும்புகிறேன். அம்மா கொட்டாங்கச்சியில் எதையோ வைத்துக்கொண்டு என்க். காகக் காத்திருக்கிறாள். "அம்மா, பச்சி தாயேன். பண்ணி வெச்சிருக்கையே!” என்று அம்பி அவள் காலைக் கட்டிக்கொண்டு நச்சரிக்கிறான். 'ஒ பஜ்ஜியா, ஜாலி, ஜாலி!! நான் குதிக்கிறேன். தொட்டிலில் பாப்பா என் குதிப்பைக் கண்டு சிரிக்கிறாள். டேய், பாப்பாவைத் தூக்கி மடியில் வெச்சுக்கோடா. அம்பி, நீயும் அண்ணா பக்கத்தில் உக்காரு. ஆ, அப்புடித் தான்!” அம்மா கொட்டாங்கச்சியை எங்கள் எதிரில் அப்படி யும் இப்படியுமாய்ச் சுற்றுகிறாள். அவள் உதடுகள் அசை என்னம்மா அதுலே வெச்சிருக்கே? என்னம்மா அது? எனக்கு ஊ!’ அம்பிக்கு எப்பவும் தின்பதில்தான் ஞாபகம். என் தம்பிதானே! 'உஷ்! சும்மாயிரு!” 'மறுபடியும் இருமுறை சுற்றிவிட்டு, குடு குடுவென அம்மா சமையலறைக்கு ஒடுகிறாள். அங்கிருந்து வெடிக்கும் சப்தங்களும், மிளகாய் நெடியும் கிளம்புகின்றன. அப்பா இருமிக்கொண்டே வாசலறையிலிருந்து கத்து கிறார். 'இந்த வீட்டில் கேட்பார் யாருமில்லையே! கொலை நடக்கிறது.!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/143&oldid=1247241" இலிருந்து மீள்விக்கப்பட்டது