148
இதழ்கள்
| $$ இதழ்கள் அடுத்த நிமிஷ்ம் வண்டி இன்னொரு முடுக்கில் திரும்பி விடுகிறது. நாங்கள் எங்கள் விடுதி சேருகிறோம். 'டி.பன் எல்லாம் பின்னால் வந்துண்டே யிருக்கு, முன்னால் தாகசாந்தியா ஒரு டோஸ் காப்பி சாப்பிடுங்கள். என்னதான் இருந்தாலும் உங்கள் வீட்டுக் காப்பி மாதிரி இருக்குமா!' நெடுநேரம், அத்த நிமிர்ந்த முகமும், விழிகளிலிருந்து தெறித்த நீலமும், குறுநகையும், நெஞ்சப் பதிவிலிருந்து மறைய மாட்டேன் என்கின்றன. ஆனால் அடுத்த நாள், நான் கலியாண வாசலில், பாகி யின் கையைப் பற்றியதும், என் மை தீட்டிய விழிகள், அவள் மை தீட்டிய விழிகளைச் சந்தித்ததும், அந்த வேளைக்கு மற்ற தெல்லாம் மறந்துவிட்டது. இவள் பாகீரதி. பாகி என் மனைவி; இவளை நான் கைப் பிடித்துவிட்டேன். இனி எனக்கு இவள். இவளுக்கு நான். தன்னால் நேரவிருக்கும் சடங்குகள் எல்லாம் இந்தத் தொடர், இத்தச் சங்கல்பத்தின் வெற்று நிழல்கள். இனி எங்களுக்கு ஒருவரையொருவர் விட்டால் கதியில்லை, விதியில்லை. இவள் பாகீரதி. பாகி என் மனைவி. X X X ஆடி வெள்ளிக்கிழமை மாலை. அம்மா எங்களைக் கூப்பிடுகிறாள். "என்னை ரெண்டு பேரும் பிடிச்சுண்டு சுவாமியலமாரி யண்டை கொண்டுபோய் விடுங்கள்’ என்கி றாள். உடம்பு அலண்டு போகும் என்று எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை, எங்கள் மேல் சாய்ந்து கொண்டு சுவாமி படத்தருகில் போனதும், பலத்தைக் கூட்டிக் கொண்டு, தானே சுயமாய் நின்று குத்துவிளக்கை ஏற்றுகிறாள். பாகி! இப்படிவா-' சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து மருமகளுக்கு இட்டுக் குத்துவிளக்கை அவளிடம் கொடுக்கிறாள்.