168
இதழ்கள்
శ్రీ இதழ்கள் போல் ஏனோ தானோ என்று இருப்பாள். அநாவசியமாய் மனிதர்கள் அலட்சியம் செய்வது போல் கூடத் தோன்றும். “எனக்கு எல்லாரையும் பற்றி எல்லாம் தெரியும். யார் என்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள், நினைத்துக் கொண் டிருக்கிறார்கள் என்து தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறேன்; முடிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லாம் தின்று விழுங்கி நான் கொட்டை உமிழ்ந்தாயிற்று. எனக்கு என்னடா இனிமேல்? எந்தப் பட்டு பனாசுக் கட்டிக் கொள்ள வேண்டும்? எந்த நகை நட்டுப் பூட்டிக் கொள்ள வேண்டும்? இல்லை, எந்த பிறந்தகத்துக்குக் கொடுத்துவிடப் போகிறேன்? எந்தப் பெண்ணுக்குச் செய்துவிடப் போகிறேன்? நீ சம்பாதித்தால் உனக்காச்சு, உன் பெண்டாட்டி குட்டி குழந்தைக்கு ஆச்சு.” இப்படிப் பேசுவாளே தவிர, வீட்டின்மேல் அம்மாவுக்கு இருந்த பிசுக்கு, சிறிசுகளுக்கு இல்லை. திடீர் திடீரென்று காரிய வெறி பிடித்துவிடும். நினைத்துக் கொண்டு மருமகளிட மிருந்து கைக்காரியத்தைப் பிடுங்கிக்கொண்டு ஒரே மூச்சாய் மாதக் கணக்கில் செய்வாள், 'இதெல்லாம் உனக்கு என்னத்துக்கு அம்மா? சின்ன வர்கள் காரியம், பெரியவர்கள் காரியம் என்று கிடையாதா?” "ஏண்டா குரு, எனக்குக் கையும் காலும் இருக்கிற போதே ஒடித்துத் திண்ணையிலே உட்கார்த்தி வைக்க வேண்டும் என்று பார்க்கிறாயா?” "ஐயோ, இதென்னம்மா விதண்டாவாதம்? நீ சொன் ஆனால் அவள் செய்ய மாட்டாளா? இல்லாவிடில் செய்து அரைக்குந்தான் போதுமே!’ “ஏண்டாப்பா, அவள் செய்தால்தான் காரியம்; தான் செய்தால் இல்லையா?” “என்னம்மா, அர்த்தத்தைத் திருப்புகிறாய்?’ "குரு உனக்குத் தெரியாது, (அம்மா இருந்த வரைக்கும் குருவுக்கு ஒன்றும் தெரியாது, தெரியக்கூடாது. ஐயோ, இந்தப் பெரியவர்களின் ஆட்சி) அவள் சிறிசுதானே?