உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதழ்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

171

இதழ்கள் - joi

நமஸ்காரம் பின்னி விட்டதற்காக எனக்கு. மாட்டுப்பெண் தலையிலே வெள்ளி மயிர் ஒன்று முளைத்திருந்தது. அதற்காக உங்களுக்கு-’ திடீரெனத் தொண்டையை அடைத்துக்கொண்டு எழுந்து அழுகையை அடக்கிக்கொண்டு உஷை காடிக்கு ஓடினாள். அழுது அழுது உஷைக்குக் கண்ணிர் வறண்டுபோய், விழியோரங்கள் வரக்கு வரக்கென இழுக்கக்கூட ஆரம்பித்து விட்டன. முழங்கை வளைவினின்று நிமிர்த்த முகத்தை எதிர்க் கண்ணாடியில் காணச் சகிக்கவில்லை. கன்னங்களில் கண்ணிர்க் கறை காய்ந்து, விழிகள் முட்டிக்கொண்டு முகமே வீங்கிப் போய்...... மாலைக் காற்றில் ஜன்னலின்மேல் கவிந்து படர்த்த கொடிகளில் இலைகள் அசைந்தன. வீட்டுக்கு எதிரே சிவன் கோயிலின் கோபுர ஸ்தூபியின்மேல் உட்கார்ந்துகொண்டு ஒரு புறா கழுத்தை மினுக்கி மினுக்கிச் சிறகைக் கோதிக் கொண்டிருந்தது. கண்ணாடிக்குமேல் மாட்டியிருந்த படத்தி லிருந்து அவள் மாமனாரின் விசனம் தோய்ந்த கண்கள் அவள் மேல் குனிந்து அவளைத் தேற்ற முயன்றன. கீழிருந்து இரண்டு பாட்டிகளின் பேச்சும் மேலே மிதந்து வந்தது, 'சிவகாமு, அந்தப் பெண்ணைக் குற்றம் சொல்வதிலேயும் பிரயோசனம் இல்லை.” 'நன்றாக இருக்கிறது, பாட்டி! நீங்கள் ஒருத்தரே போதுமே எனக்கு! நான் யாரை என்ன குற்றம் சொன்னேன்?’ ‘சரி, சலித்துக்கொள்வதில் பலனில்லை.” } • 'அட ஈசுவரா! அவளை என்ன சலித்துக்கொண்டேன்? 'சரி போ. உன்னோடு தர்க்கம் பண்ண நான் ஆளல்ல.” பாட்டி பொறுமை இழந்தாள். நான் என்ன சொல்ல வந் தேன் என்றால், உன்குடும் பத்துக்கே நாக சாபம் இருக்கிறது. உன் மாமனாருக்குத் தாத்தா நாளிலே வீட்டில் வாழ்கிற பாம்பை அடித்துக் கொன்றுவிட்டாராம். வாழ்கிற பாம்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/171&oldid=1247269" இலிருந்து மீள்விக்கப்பட்டது