இதழ்கள்
181
இதழ்கள் 181
ஆனால் அன்றையிலிருந்து உஷை மடி, ஆசாரம், விரதம் பூஜைகளில் மும்முரமாய் இறங்கி விட்டாள். வீட்டுக்கு எதிரேயே கோயில், அம்மாளுக்கு அபிஷேகத் துக்கு ஜலம் எடுத்து வைப்பதும், கோயிலில் இழைகோலம் போடுவதும், பூத்தொடுத்துக் கொடுப்பதும், கோயிலுள் இருந்த நந்தவனத்தில் அரசமரத்தைச் சுற்றுவதுமாய் வீட்டு வேலை நேரங்கள் தவிர, பாக்கிப்போது கோயிலிலேயே குடியாய்க் கிடப்பாள். இம்மாதிரி பக்தி வெள்ளத்தில் அவன் தி. ளைத்துக் கிடப்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு விளையாட்டும் வினையுமாய்க் கவலைப்பட ஆரம்பித்து விட்டான். -
- ஏதேது, என் உத்தியோகத்துக்கு ஆபத்து வந்துவிடும் போல் இருக்கிறதே. ஏன் ஐயா, இன்றைக்கு ஆபீசுக்கு லேட்' என்று என் எஜமான் கேட்டால், நான் என்ன சொல்ல? இன்றைக்கு வெள்ளிக்கிழமை அல்லவா? என் அக முடையாள் மங்கள ஸ்நானம் பண்ணிவிட்டு அரசமரத்தை நூற்றெட்டுச் சுற்றுக்கள் சுற்றிவிட்டு, தேங்காய் வெற்றிலை டாக்குக் கொடுக்க, ஒரு பழுத்த சுமங்கலியைத் தேடிவிட்டு, அப்புறந்தான் சமையலுக்கு அடுப்புப் பற்ற வைக்க முடிந்தது. இத்தனைக்கும் வடைக்கு நான் அரைத்துக் கொடுத்தேன்’ என்று சொல்லட்டுமா?” .
அம்மா திண்ணையில் காலை நீட்டி உட்கார்ந்தபடி தோலோடு வறுத்த வேர்க்கடலையைத் தரையில் ணக்கு, ணக்கு என நெற்றிக் கொண்டே, சுவருக்குச் சொல்விக் கொண்டிருப்பாள். "கதை கேட்ட ரோசத்தில், இப்படியெல்லாம் அரச மரத்தைச் சுற்றிவிட்டு, அடிவயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டால் ஆகிவிட்டதா? அதற்கு வேளை வர வேண்டாமா?’ . உஷைக்கு உடம்பெல்லாம் ஊசியாய்க் குத்தும், 'அம்மா, நீங்கள் சொல்கிற அந்த வேளைதான் என்ன?” நான் சொல்கிற வேளை, தைரியம், உசிர், தாய்மை, அடிவயிற்றின் மிருது எல்லாம் ஒன்றேதான்.”