இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
80
இதழ்கள்
፩∂ இதழ்கள் கட்டில் மேல் கிடத்தினதும் பையன் துரக்கக் கலக்கத்தில் ஏதோ முனகிப் புரண்டான். இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
- அப்பா!”
“என்ன கண்ணா!” இருவரும் சேர்ந்து அவன்மேல் குனிந்தனர். தலைகள் மோதிக்கொண்டன. 'அப்பா, இந்தத் தடவை அம்பிப் பாப்பா பிறந்ததும் அவனை நானே பார்த்துக்கொள்வேனா அப்பா?” ஆமாம் கண்ணா!' 'நானே தொட்டிலை ஆட்டுவேன்!” ஆமாம், கண்ணா!' “எந்தக் காக்கையும் வராது.” அவர்களுக்குப் பேச்சு எழவில்லை. ஆனால் பதிலுக்கு அவன் காத்து இல்லை. உறக்கத்தில் அழுந்திப் போனான்.