பக்கம்:இதழ்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதழ்கள்

99

இதழ்கள் #9

'சரி சரி; இனிமேல் நம்ப கிளம்பினாப் போல்தான்.” 'ஸாரதி, பொறுடா-' கிழவி முகத்தில் ஒரு தினுசான வெற்றி ஒளி வீசிற்று. அவள் எதிர் குஞ்சுத் திண்ணயில் உடம்பை மெதுவாக இறக் கிக்கொண்டு உட்கார்ந்தாள். "பொறு; இதெல்லாம் இன்னி சமாசாரமா, நேத்தி சமாசாரமா? இதுக்கு வயஸ்ே கிடையாது. இது எல்லா கு தனியா இருக்கும் பகவானாலேயே முடியாத காரியம். நம்ம் ரெண்டு பேரையுமே எடுத்துக்கோயேன்? நம்ம்ைப் பிகிச்சு வெக்கணும்னு எத்தனை பேர் எத்தனை தினுசா கஜகர்ணம் கோகரணம் போட்டுத் தலைகீழா நின்னு பாத்தா? அவச ளாலே முடிஞ்சுதோ? நமக்குள்ளேயே ஒத்தருக்கு ஒத்தர் நெஞ்சு வரைக்கும் ஒத்தரைப்பத்தி ஒத்தருக்கு நெஞ்சீரல் எவ்வளவோ யிருக்கு. சொல்ல முடிஞ்சதும், சொல்ல முடி. யாததும், ஜதையிலடுக்கற வரைக்கும் வயத்தோடு வெச்சுண்டு கூடவே கொண்டுபோடும் எத்தனையோ விஷயங்கள்! நீ ஜனிச்ச வேளையும் நான் வயறு திறந்த வேளையும் அப்படி. அப்படியும் ஒத்தருக்கு ஒத்தர் விட்டுப் போறதோ இப்பவும் உனக்கு ஆபீஸில் தலையை வலிச்சா, எனக்கு நெத்தி நரம்பு புடைச்சுண்டு துடிக்கிறது. என் குழந்தை தன்னாயிருக் கனும்னு நினைச்சுண்டு உடனே சக்கரை டப்ப்ாவைத் திறந்து கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக்கறேன். ஆனால் பாக்கற வாளுக்கும் கேக்கறவாளுக்கும் என்னவோ கிழவிக்கு, சாகற காலத்தில் தித்திப்பிலே பித்துப் பிடிச்சிருக்கு; சக்கரை சுருக்க ஆயிடறதே'ன்னு தோணும். ஆனால் அவாவாளுக்கு ஒண்ணொண்ணு தோணறத்துக்கு நான் என்ன பண்ண முடியும்?” கிழவி இந்த இடத்தில் பாகியையே பார்த்தும் கொண்டு பேசினாள். ஆனால் பாகி சிணுங்கவில்லை. இன்றையப் பழக்கமா, நேற்றையப் பழக்கமா? ஒரு பக்கம் மாமியார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/99&oldid=1247197" இலிருந்து மீள்விக்கப்பட்டது