பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இதிகாசக் கதாவாசகம், மெளன யோகத்திலிருந்த முனிவர், அரசன் வினவுக்கு விடை பகாவில்லை. அதனுல் பரீகூகித்து 'இம் முனிவ லுக்கு இவ்வளவு அகந்தையா? என்று முனிவர் பெரு மையை அறியாமல் அவர்மேல் முனிவு மிகுந்து, பக்கத்தில் செத்துக்கிடந்த பாம்பு ஒன்றைத் தன் வில்லின் துனியால் எடுத்து முனிவர் கழுத்தில் மாலை போல் தொங்கவிட்டுத் தான் செய்தது தகாத செய்கை என்று நினையாமல் முனி வரைப் பரிகசித்துத் தன் நகரம் போய்ச் சேர்த்தான். முனிவர் அதனை அறிந்தும் அவர் "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற நீதியை ஒதியுணர்ந்த உத்தமாாதலின், அடாச் செய்கை செய்த அரசனே வெகுண்டு சபிக்காமல் பொறு மையுடன் வாளா இருந்துவிட்டார். இம் முனிவர்க்குச் சிருங்கி என்னும் பெயர் வாய்க்க புத்திரர் ஒருவரிருந்தார். அவர் இளம் பருவமுடையவர்; கூரிய புத்தி மிகுந்தவர்; அவர் பிரமதேவரை அடுத்து ஒவ் வொரு காலத்திலும் நியமத்துடன் அவரை உபாசித்து வந்தார். பின்பொருநாள் அவர் பிரமதேவரிடம் விடைபெற் றுத் தம் கங்கையின் ஆச்சிரமத்துக்கு வந்துகொண் டிருக் தார்.வரும் வழியில் வனத்தில் அவரது நண்பனுகிய கிருசன் என்னும் முனிபுத்திரன் சில சிருர்களுடன் விக்யாடிக் கொண்டிருந்தான். சிருங்கி அங்குச் சென்று அவர்களுடன் சில பேசத் தொடங்கினர். அப்போது கிருசன் சிருங்கி