உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7: இதிகாசக கதாவாசகம். வமாகிய உங்களுக்கு முதற் பிச்சையைச் சமர்ப்பித்துவிட்டு இரண்டாமுறை பிச்சை எடுத்து உண்டுவருகிறேன்” என்று மறுமொழி பகர்ந்தான். முனிவர் அதனைக்கேட்டு "மாணவ! நீ இங்ஙனம்செய்வது நியாயமான குருகுல வாசமாகாதே; இந்தச் செய்கையால் நீ இரந்துண்னும் வறிஞர்களுக்கு இடைஞ்சல் செய்தவனுவாய்” என்று கூறினர். உபமங்பு கேட்டு அப்படியானுல் இனி தான் இச் செய்கையை இது முதல் செய்வதில்லை” என்று சொல்வித் தன் பணிகளே எப்போதும் போலவே குறைவின்றி நடத்தி வந்தான். பிச்சை யெடுத்துண்ணுதலை நிறுத்தியும் அவன் புஷ்டி யாகவேயிருந்து வருவதைக் கண்ணுற்ற ஆசாரியர் மான வனைப் பார்த்து மாணவ நான் உன்னுடைய பிச்சை முழுவகையும் வாங்கிக்கொள்கிறேன். இரண்டாம் முறை நீ பிச்சை எடுப்பதும் இல்லை. இப்படியிருந்தும் புேஷ்டியா கவே யிருக்கிருய் அது எதனுல்?” என்று வினவினர். உப மத்யு, முனிவரைப் பார்த்து 'ஐய! நான் கன்று உண்ட பின்னர் தாளுகச்சுரக்கும் இப் பசுக்களின் பாலால் ஜீவித்து வருகிறேன்' என்று சொன்னன். உபாத்தியாயர் 'மாணவ! நன்ருயிருக்கிறது உன செய்கை, பாலே நீ உண்ண நான் அதுமதி கொடுக்கவில்லையே; அப்படியிருக்க நீ இப்படிச் செய்து வருவது தகுதியாமோ? என்று சிறிது கோபித் துக் கூறினர். உபமத்யு அது கேட்டு 'இனி ஆசிரியருக்குச் சம்மத மில்லாத இச்செயலைச் செய்வதில்லை யென்று கூறிவிட்டுப் பசு கிரைகளை மேய்த்து வந்தான். மீண்டும் ஒரு நான் குருவாகிய தவுமியர், "உபமத்யு கீ பிச்சையெடுத் துண்ப