பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். குரு வம்சத்திற் பிறந்து விளங்கிய பாண்டு மகாராஜன் காட்டில் வேட்டை யாடும்போது மாதுருவெடுக் திருக்க கித்த மாமுனியை அம்பெய்து கொன்ற சமயத்தில் அம் முனிவர் அவனுக்கிட்ட சாபத்திற்குப் பயந்து, அச்சாபம் தன்னைப் பீடியாமலிருக்கற் பொருட்டுத் தன் மனைவிகளா கிய குந்திதேவியோடும் மாத்திரியோடும் வனத்திற்குச் சென்று வானப் பிரஸ்களுய்த் தவ விரதங்களே நோற்றுக் கொண்டிருத்தான். அங்ஙனமிருந்தும் இக்க மாமுனியின் சாபத்தால் பாண்டு சின்னுளில் இறந்து சுவர்க்கம் புகுந் தான். அவன் இறந்து போவதற்கு முன்னரே குந்திதேவி, துருவாச முனிவரிடம் பெற்ற மந்திர பலக்கினல், யமன், வாயு,இந்திரன் என்பவர்களைத்தன்னகத்துக்குவாவழைத்து, அவர்களது அதுக்கிரகத்தினுல் முறையே உதிஷ்டான், பீமன், அர்ச்சுனன் என்னும் மூன்று புத்திரர்களைப் பெற்றி ருந்தாள், சககளத்தியான மாத்திரியும், குந்தியிடமிருந்து பெற்ற மக்கிர உபானையால் தேவ வைத்தியர்களான அசு வினி கேவர்களே அழைத்து அவர்களது அதுக்கிாகக் கால் நகுல சகாதேவ ரென்னும் இரட்டைப் பிள்ளைகளைப் பெற். றிருந்தாள். பாண்டு விண்ணுலகம் புகுந்தபின் அவன் புக் திரர்களைப் பரிபாலிப்பாரின்மையில்ை அங்கிருந்த முனிவர் சிலர் பிள்ளைகளையும் குந்தி மாத்திரி இவர்களேயும் அஸ்தின புரத்தில் அரசு செய்திருக்க பாண்டுவின் தமையனுகிய திரு தாாஷ்டிரனிடம் கொண்டுபோய்ச் சேர்த்தனர்.