84 இதிகாசக் கதாவாசகம். யர்க்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தான். ஞாதியசாகிய திரி யோதனன் முதலியோர்க்கு மகிழ்ச்சியைக் கெடுத்தான். அதனுல் அவர்கள் பீமன்மீது முன்னேயினும் அதிகமான உட்பகைமை பூண்டு மனம் புழுங்கியிருந்தார்கள். சின்னுட்கழிந்தபின், பாண்டவர்களும், துரியோத குதியரும் கிருபர் என்னும் மறையவரிடமும், பின்பு துரோ ணரிடமும் வில்வித்தை முதலிய போர்த்தொழில் பயின் முர்கள். இப்பயிற்சியிலும் பீமனும் அவனது துணைவருமே முதன்மைபெற்று விளங்கினர்கள். இங்ங்னம் விளங்கி வரும் நாளில் பீமனது தமையனுகிய உதிட்டிானது கற் குண நற்செய்கைகள் நாட்டினருடைய உள்ளங்களைக் கவர்ந்துகொண்டன. அகளுல் அவர்கள் யாவரும் இனிக் குரு நாட்டுக்குத் தகுந்த அரசன் உதிட்டிரனே யன்றி வேருெருவருமிலர், என்று கருதி, திருதாாட்டிரனிடம் சென்று உதிஷ்டிசனுக்கு இளவரசுப்பட்டம் கட்டும்படி வேண்டிஞர்கள். திருதராட்டிரனும் அவ்வாறு செய்வதே உத்தமம் என்று கல்லோரையில் உதிட்டிரனைக் குருநாட் டுக்கு இளவரசனுக்கினன். இதனைக் கண்ட துன்மதி யுடைய துரியோதனன் மனம் உடைந்து, திருகராட்டிர னிருக்கும் தனி இடத்தை அடைந்து, கொதித்துக் தபித்து அவனிடத்தில் தன் மனத்துயரை வெளியிடக் தொடங்கினன்: "பிதாவே அயோக்கியர்களான நகரத்து ஜனங்களு டைய பேச்சைக்கேட்டு என்ன காரியஞ் செய்து விட்டீர்?
பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/89
Appearance