பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

15

பெண்ணை-வடவெள்ளாறு, தென்வெள்ளாறுபோல, பண்டு வடபொன்னி, தென்பொன்னி ஆறுகள் இருந்திருக்கலாமோ என்றுகூடக் கருதலாம். ஏனெனில் இலங்கையில் இடைக்காலத்தில் சோழர் எழுப்பிய தலைநகரம் பொலன்னருவாவிலும் ஈழம் என்ற இச்சொல்லின் பொருள் தொனிக்கிறது. இரு பொன்னிகளும் ஓடிய நிலங்களின் பெயர்களும் இதற்கேற்ப ஒருமையுடையவையாய் இருக்கின்றன். காவிரிக்கு வடக்கிலுள்ள தமிழகம் பண்டு அருவா என்றும் மாவிலங்கை என்றும் அழைக்கப்பட்டிருந்தது. ஈழம் தென்அருவா அல்லது பொன்அருவா அல்லது பொலன் அருவாவாகவும், தென்னிலங்கை அல்லது சிறு இலங்கையாகவும் பெயர் பெற்றிருத்தல் இயல்பு.

பழந்தமிழ் நாகரிகம் பல திசையில் கெடாது பேணும் மலையாள மக்களுக்கும், இலங்கைவாழ் தமிழர் மட்டுமின்றி இலங்கைவாழ் சிங்களவருக்கும் பல ஒப்புமைகள் மொழியில், பழக்க வழக்கங்களில், பண்பாட்டில் இன்றும் காணப்படுகின்றன. இவற்றை நாம் தென்கிழக்காசியா எங்குமே காணலாம். தாம் வானவர் மரபினர், சிங்க மரபினர் என்ற வழிவழிக் கதைகள், பண்டைத் தமிழர் சங்க காலம்வரை வழங்கியிருந்த வண்ணப் பூவாடைகள், தலைமுடியின் ஐம்பால் சிங்காரிப்பு, பெண்கள் மண உரிமை, கைகால்களுக்குச் சாயம் தோய்த்தல், கண்ணுக்கு மையிடல், முகமூடியும் கவசமுமிட்ட நடனநாடக அரங்குகள், கோயில் வகைகள் ஆகியவை இவற்றுள் சில. மலையாளம் என்ற பெயரிலுள்ள மலை மாலத்தீவிலும், மலாயாவிலும், சுமாத்ராத் தீவின் பழைய நகரமான மலையூரிலும் இடம் பெற்றிருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள ஊர்ப்பெயர்கள், மரபுப் பெயர்கள், ஆற்றுப் பெயர்கள் தென்கிழக்காசியாவெங்கும் கடல் கடந்து, சாவா, போர்னியோ, செலி-