பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இதுதான் திராவிடநாடு

பிஸ் தீவுகள்வரை காணப்படுகின்றன. பண்டைச் சப்பானிய எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் திரிபே என்று சப்பானிய பழமையாராய்ச்சியாளர் குறித்துள்ளனர்.

சேரநாட்டவரையும் திபெத்தியரையும் போலவே, சீனர் தம்மை வானவர் என்று குறித்துக்கொண்டனர். இம்மூன்று நாடுகளிலும், சப்பானிலும் உள்ள கோயில்கள், நாடகங்கள் ஆகியவற்றின் ஒப்புமைகள் வரலாற்றுக்காலத் தொடர்பு கடந்தவை. இன்று சீனர் மங்கோலிய இனத்தவர் என்று எப்படியோ கருதப்பட்டு வருவதனால், சீனரின் தென்கிழக்காசியத் தொடர்பு மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சீனரே வடசீனத்தின்மீது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் படை எடுத்துச் சூறையாடிய மங்கோலியக் காட்டுமிராண்டிகளை வெறுத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக அவர்கள் கட்டிய நாலாயிரம் கல் நீளமுடைய கோட்டை, 'நெடுமதில்' என்று இன்றளவும் உலக அதிசயங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகிறது. மங்கோலியரும் அவ்வினத்தவரான மஞ்சூரியரும் குடியேறி வாழ்ந்த பகுதி இன்றும் மங்கோலியா, மஞ்சூரியா என்று குறிக்கப்படுகின்றது. தென்சீனம், இன்றைய வடமங்கோலிய மஞ்சூரியப் பகுதிகளிலும் பழமை வாய்ந்த நாகரிகமுடையதென் பதையும், அதுவே உண்மைச் சீனம், பண்டிருந்து நாகரிகம் வளர்த்த சீனம் என்பதையும் இது காட்டுகிறது. தமிழ், தமிழின நாகரிகங்களுடன் இனத்தொடர்பும் நாகரிகத் தொடர்பும் தொல்பழங்கால வரலாற்றுத்தொடர்பும் மிக்க பகுதி இது.

பண்டைத் தமிழரும், மலாய் மக்களும் கடலோடிகளாய் இருந்தனர். பிரிட்டன் உலகில் ஒரு பெருங்கடலரசாக வளர்ந்த காலம் 19-ஆம் நூற்றாண்டேயாகும். அதுவரை உலகின் கடற்பேரரசகளாகவும்