பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

17

வாணிகப் பேரரசுகளாகவும் நிலவியவர்கள் இவர்களே. மேற்கே நடுநிலக்கடல் நாடுகளில் பரவிய 'திரையர்’ பண்டைத் திராவிட இனத்தவரே என்று திருத்தந்தை ஹீராஸ் குறிப்பிடுகிறார். அதுபோல அவர்கள் கிழக்கேயும் சீனம், சப்பான் கடந்து நெடுந்தொலை கடல் கடந்தும் கடலோரமாகவும் பரவியிருந்தனர். அமெரிக்கப் பழங்குடி மக்களைப்பற்றி ஆராய்பவர்கள் அக்கண்டத்தின் பழம்பெரு நாகரிகங்களான மய, இங்கா, பெருவிய இனங்கள் திராவிட இனத்துடனும் தென்கிழக்காசிய நாகரிகத்துடனும் மிகப் பழந்தொடர்புடையவை என்று குறித்துள்ளனர். வெற்றிலை, பாக்கு, சுண்ணக்கலவை இத்தொடர்புக்குரிய ஒருசின்னம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இங்ஙனம் விந்தமுதல் குமரிவரை மொழியின வாழ்வு பெருக்கி, மேற்கும் கிழக்கும் பண்டை நாகரிக உலகெங்கணும் பண்பு பரப்பிய உலகின் தலைமாநிலமே திராவிட நாடு.


4. வாழ்வும் வீழ்வும்

கதிரவன் வழிபாடு, நாக வணக்கம், உழவுத் தொழில், நெற்பயிர் விளைவு, பருத்தி நூற்றல், நெசவு, ஆநிரை பயிர்ப்பு முதலிய பண்புகளை உலகெங்கும் பரப்பிய ஒரு தொல் பழங்காலப் பேரினம் இருந்ததென்று, ‘கதிரவன் சேய்கள்' என்ற பழமையாராய்ச்சி நூலில் டபிள்யூ. ஜே. பெரி என்ற அறிஞர் விரித்து விளக்குகிறார். எகிப்தியரும், தென்னாட்டவரும் இவ்வினத்தின் இரு பெருங்கிளைகள் என்று அவர் கருதுகிறார். 'உலக வரலாறு' இயற்றிய எச். ஜி. வெல்ஸ் என்பார், மேற்கிலும் கிழக்கிலுமட்டுமன்றி, வடக்கிலும் தெற்கிலும்கூடக் கிட்டத்தட்ட நாகரிக