பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இதுதான் திராவிடநாடு

வாழ்ந்து, கடலுலகும் நிலவுலகும் ஆண்ட தடங்களை மட்டுமே அதில் காணலாம். ஆனால் உலகங்கண்டு தமிழகம் காணா அயலினக் கட்சிகளாகிய கம்யூனிஸ்டுகளும், சோஷலிஸ்டுகளும், உருவிலா நூற்றுக்கணக்கான அயலினப் பரப்பாகிய 'மீந்த இந்திய யூனியன்’ கண்டு தமிழகம் காணமுடியாத அயலினக் கட்சிகளாகிய காங்கிரசும், பிரஜா சோஷலிஸ்டுக்கட்சியும், தமிழரசுக் கட்சியும் 'எங்கே திராவிடநாடு' 'எங்கே திராவிடநாடு' என்று துடித்து ஏங்குகின்றன. எங்கே வரலாற்றில் காட்டு, சொல்லாராய்ச்சித் தளத்தில் சென்று விளக்கு என்று தலைவர்களுக்கு அறைகூவல் விடுத்து, அறிஞர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, மக்களை அத்துறையில் விழிப்படையும்படி ஊக்கி வருகின்றன. தெரியாத மக்களுக்கும் தெரிவிக்க உதவும் இவ் அறியாத மக்கள் கேள்விக்குத் திராவிட இயக்கம் நன்றி தெரிவிக்கும் கடப்பாடு உடையதே என்னலாம்.


5. வடக்கும் தெற்கும்

பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை எவருக்கும் தலை வணங்காமல் உலகில் தனியாட்சி செலுத்திய மாநிலம் திராவிடநாடு. தென்திசையரசர் வடதிசையில் படையெடுத்து அதை அடிப்படுத்தியதுண்டு. நிலந்தரு திருவிற் பாண்டியன், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், ஆந்திரப் பெரும் பேரரசர், கலிங்கப் பெரும் பேரரசர், சோழப் பெரும்பேரரசன் இராசேந்திரன் ஆகியோர் வரலாறுகள் இதற்குச் சான்று. ஆனால் வடதிசை யரசர், பேரரசர் எவரும் திராவிடத்தின் வட எல்லையில்கூட நெடுங்காலம் விளையாடியதில்லை. அசோகன் கலிங்கம் கடந்ததில்லை, சோழப் பேரரசர் கலிங்கம்