பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

27


7. இயற்கைத் தேசீயம் எது ?

திராவிட நாட்டு எல்லை மட்டுமல்ல, தேசீயமும் இயற்கைத் தேசீயம். அது மொழியையும், இனத்தையும், நாகரிகத்தையும் வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்டது. அதில் பேசப்படும் மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள். இவை கிட்டத்தட்ட ஒரே மொழி என்று கூறத்தக்க அளவு அடிப்படை ஒற்றுமையும் பொது வரலாற்று, நாகரிக, இனத் தொடர்பும் உடைய மொழிகள். திராவிட நாட்டின் நில இயல் எல்லையில், தேசீய எல்லையடுத்து நிலவும் மராத்தி, பீலி, குஜராத்தி, கோண்டு, கூயி, ஒரியா முதலிய மொழிகளில்கூட, கோண்டு 'பண்படாத் திராவிட மொழி’ என்று வகுக்கப்படுவது. 'பீலி' கூட ஆரிய மொழியினம் சாராதது; தமிழக 'வில்லி'களின் தொடர்புடைய பண்டைப் பெருந்திராவிட இனம் சார்ந்த இனக்கலவை மொழியே. தவிர வரலாற்றுக் காலத்திலேயே மராத்தியும், குஜராத்தியும் திராவிட (நாட்டு) மொழிக்குழுவில் சேர்க்கப்பட்டிருந்தன. அந்த அளவு அவை ஆரிய திராவிடக் கலப்புக்கு ஆளானவை. இவ்வகையாகத் திராவிடத்தின் வடதிசை நிலஎல்லை இயல்பான தேசீய எல்லையாகவும், இயல்பாக வடக்கிலுள்ள ஆரிய இன மொழிகளுடனும் பிற வடதிசை இனங்களுடனும் படிப்படியாகக் கலக்கும் எல்லையாகவுமே இருக்கிறது.

திராவிட நாட்டின் தேசீய எல்லை திராவிட நாட்டின் நிலஎல்லையைப் பார்க்கச் சற்றுக் குறைந்ததே. ஆனாலும் திராவிட இயக்கத் தலைவர்கள் நிலஎல்லை முழுவதும் கோரவில்லை. ஏனெனில் வடதிசைப் போலித் தேசீயத்தைப்போலத் திராவிடத் தேசீயம் ஏகாதிபத்திய நோக்கம் கொண்டதன்று. நில ஆதிக்க, இன ஆதிக்க நோக்கம் கொண்டதன்று. துருக்கிய