பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதுதான் திராவிடநாடு

31

அதே முறையைக் கைப்பற்றிக் கீழ்திசைத் தேசீய இனங்களை அடக்கியாள முற்பட்டு வருகிறது.

இந்திப் பரப்பும் தில்லியும் கீழ்திசை அடிமைக்கள மையங்கள் என்று, வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டுகொண்டதனால்தான், தன் ஏகாதிபத்திய வாரிசுரிமையைத் தன் அடிமைப் பிள்ளையாகிய தில்லிக்குக் கொடுத்துச் சென்றது. தான் கண்டெடுத்த உள்நாட்டு விதேசி மொழியாகிய இந்தியையும் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளது.

வீரமரபில் நின்ற பிள்ளையாகிய தென்னகத்தை நம்பி வெள்ளையர் அதனிடம் உரிமையை ஒப்படைக்க விரும்பவில்லை. தென்னகம் விடுதலை உரிமை பெற்றால் கீழ்திசை எங்கும்-ஆசியா, ஆபிரிகா முழுவதும் முன்போல் மீண்டும் புதிய தேசீயங்களாகத் தழைத்துப் புதுநாகரிகம் வளர்க்க நேர்ந்துவிடும் என்பதையும், கீழ்திசையெங்கும் வெள்ளை ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் சுரண்டலுக்குக் குந்தகம் வந்துவிடும் என்பதையும் வெள்ளையர் அறிந்திருந்தனர். அதே காரணத்தினால்தான் வெள்ளை ஏகாதிபத்தியம், தெற்கே காங்கிரஸ் சார்பில் போர் முழக்கமிட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் வாரிசுகளையோ, காங்கிரசுக்கு வெளியேயிருந்து மிதவாதப் போர்வையில் சமூகப் புரட்சியும் அடிப்படைத் தேசீயத் தன்மான ஆர்வமும் வளர்க்கத் துணிந்த நீதிக்கட்சியின் வாரிசுகளையோ முற்றிலும் தமக்கேற்ற அடிமைகளாக, கங்காணி மன்னர்களாக நம்பவில்லை. சுய ஆட்சி என்று கத்திப் பின் சுயஆட்சியின் சாரம் போதும் என்று விளக்கியும்; பூரண சுதந்தரம் என்று முழக்கிப் பின் பிரிட்டிஷ் மன்னரையே பொதுவரசின் இணைப்புச் சின்னமாகக் கொண்ட குடியரசு வேண்டுமென்று பசப்பியும் இருதிசை மணியங்களாய்த் தேசீய வேடமிட்ட வடதிசை