பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

இதுதான் திராவிடநாடு

1764-இல் வங்காளத்தில் வேரூன்றத் தொடங்கினர். அதுவரை வெள்ளையர் மூலபலம், மூலதளம் தெற்கே. சென்னையில்தான் இருந்தது. சென்னையே கிட்டத்தட்ட பிரிட்டிஷ் கம்பெனியாட்சியில் இந்தியாவின் தலைமையிடமாகவும் இருந்தது. சென்னை வீரர், சென்னைப்பணம், சென்னையில் அனுபவம் பெற்ற கவர்னர்கள், தளபதிகள், கிளைவ் (Clive) ஸர் அயர்கூட் (Sri Eyrs Coote) போன்றவர்கள் உதவியாலேயே வங்காளம் வெல்லப்பட்டது. ஆனால் தெற்கே 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தேசீயக்கனலின் வெப்பம் வெள்ளையரைத் தாக்கியதனால், 1764-க்குப்' பின், அவர்கள் வங்காளத்தில் கல்கத்தாவைத் தங்கள் தலைநகரம் ஆக்கினார்கள். 1857 வரை அதுவே இந்தியாவின் தலைநகரமாயிருந்தது. ஆனால் தெற்கிலிருந்து பரவிய தேசீயக்கனலின் வெப்பு அங்கும் நூறாண்டுகளுக்குள் வெள்ளையரைத் தாக்கத் தொடங்கவே, 1857க்குப்பின் அவர்கள் இந்தியாவின் முழு அடிமைப்பரப்பு, தேசீய ஒளிபரவாத இந்திமொழிப் பரப்பின் கோடியிலுள்ள தில்லியைத் தங்கள் புதிய ஏகாதிபத்திய மூலதளமாக்கிக்கொண்டனர்.

இந்தியாவின் உள்நாட்டுத் தேசீயங்கள், உள்நாட்டுப் பேரரசுகளின் தளங்கள் தென்னாடும், வங்கமுமே. அவற்றைவிடுத்து அயல் தேசீயங்கள், அயலினப் பேரரசுகளின் மூலதளமாகிய தில்லிக்குப் போனபின்தான், வெள்ளை ஏகாதிபத்தியம் கீழ்திசையில் எளிதில் தழைக்க முடிந்தது. தில்லி இந்தியாவின் பிடரி, இந்தி அதன் பிடரிமயிர்-இவற்றைப் பிடித்துக் கொண்டால் இந்திய மாநிலத்திலுள்ள இனங்களை எளிதாக அடிமைப்படுத்தி ஆளலாம் என்று தில்லி சென்ற வெள்ளை ஏகாதிபத்தியம் கண்டுகொண்டது. அந்த ஏகாதிபத்தியத்தின் ‘பட்லர்’ப் பதிப்பான இன்றைய வடதிசைக் குட்டி ஏகாதிபத்தியமும்